Home Blog Page 77

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார்.

சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில் 7 வருடங்​களாக, தான் படுத்த படுக்​கை​யாக இருந்த​தாக​வும் 15 நாட்​கள் கோமா​வில் இருந்​த​தாக​வும் தெரிவித்துள்​ளார். ஏழு வருடங்​களுக்கு முன் வீட்​டுக்​குள் ஒரு விபத்தைச் சந்தித்​தார் முமைத் ​கான். அதில் அவர் மூளை​யில் 5 நரம்​பு​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டன. இதனால் அவர் கோமா நிலைக்​குச் சென்​றார். 15 நாட்​கள் நடந்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சுய நினைவு திரும்​பியது.

பின்​னர் அவருக்கு வலிப்பு ஏற்​பட்​ட​தால் படுத்த படுக்​கை​யா​னார். மருத்​து​வர்​கள் குறைந்த பட்​சம் ஏழு வருடங்​களுக்கு எந்த வேலையும் உடற்​ப​யிற்​சி​யும் செய்​யக் கூடாது என்று அறிவுறுத்தினர். அவர் எடுத்​துக் கொண்ட மருந்​துகள் அவரின் உடல் எடையை அதிகரிக்​கச் செய்​தன. இதனால் சினி​மா​வில் இருந்து வில​கி​னார்.

இப்​போது, ஹைத​ரா​பாத்​தில் ‘விலைக்’ என்ற என்ற மேக்​கப் மற்றும் சிகை அலங்​கார பயிற்சி அகாட​மியைத் தொடங்கியுள்ளார். இது அவரை வெற்​றிகர​மான தொழிலதிபராக மாற்றி இருக்​கிறது.

இது பற்றி முமைத்கான் கூறும்​போது, “நான் 13 வயதிலிருந்தே என் பெற்​றோருக்​காக உழைக்​கத் தொடங்​கி ​விட்​டேன். என் இளமைக்​ காலத்தை உழைப்​பில் செல​வழித்​த​தால், திரு​மணம் பற்றியோசிக்க நேரமில்​லை. கடவுள் எனக்கு எல்​லா​வற்​றை​யும் கொடுத்​தார், பிறகு அவரே எடுத்​துக்​கொண்​டார். இப்​போது மீண்டும் புதிய பாதையைக் காட்​டியிருக்கிறார்” என்றார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரிதம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவம் இந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28 ஆம் திகதி விசேட திருப்பலிப் பூஜைகளுடன் நிறைவு பெறும்.

இந்த இரு நாள் திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் எனத் திட்டமிடப்பட்டு அவர்களுக்கான இருப்பிடம், குடிதண்னீர் உள்ளிட்ட வசதிகளுடன் இறங்குதுறை போன்ற பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்முறை இடம்பெறும் உற்சவத்தில் பக்தர்களுக்கான சுகாதார வசதிகளுடன் பாதுகாப்பான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்!

வவுனியா வடக்கை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின்போது கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக அதிகாரிகளும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளும் மிகத் தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுப்பதால் காணப்படுகின்ற பிரச்சினைகளைக் கண்டறியும் முகமாகவே குறித்த கள ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

ஆரம்பத்தில் குறித்த திட்டத்துக்கான அங்கீகாரத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வழங்கியிருந்த நிலையில் அந்தத் திட்டம் சம்பந்தமாக அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை.

எனினும், தற்போது மக்கள் எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் கள ஆய்வுப் பணிகளை அவசரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கு முயற்சி!

 

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது.

இலங்கை – சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 14 – 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.

அந்தச் செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர்.

அந்தச் செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.

அந்த விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார்.

இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்பன விடயம் தமிழ்ப் பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சாணக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பம் மற்றும் கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்பு விடுப்பதற்கு சுவிஸ் தூதரகம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.

சுவிட்ஸர்லாந்து உயர்ஸ்தானிகர் சிறி வோல்ற்றின் மத்தியஸ்தத்தில் நடைபெறவிருக்கும் இந்தச் சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த் தரப்புக்களும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவது பற்றிக் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: 17 ஆம் திகதி விவாதம்!

 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அன்றைய தினமே மேற்படி சட்டமூலம் நிறைவேறும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும், சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை சபாநாயகர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையிலேயே மேற்படி சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் இருப்பதால் சட்டமூலம் இலகுவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்ஜின் தோட்ட மக்களின் எதிர்காலம்?

 பி.கேதீஸ்

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் 28 ம் திகதி நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக எல்ஜின் மலை உச்சியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலை உச்சியின் அடிவாரத்தில் காணப்பட்ட 26 தனி குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து நுவரெலியா பிரதேச செயலகத்தினூடாக சுமார் 26 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு எல்ஜின் தோட்டா சகாய மாதா தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர், அவ்விடத்தில் பாரிய ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்கின்றனர். இவர்களை மீண்டும் தமது குடியிருப்புகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இருந்தபோதிலும் தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனையில் தாங்களுக்கு நம்பிக்கை இல்லையெனவும் மீண்டும் அவ்விடத்திற்கு சென்று குடியேற முடியாது எனவும் தமது பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதுவரை இந்த முகாமிலிருந்து வெளியேற மாட்டோம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற பெண் தெரிவிக்கையில்

நாங்கள் 2025 நவம்பர் மாத இறுதியில் நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்டோம். அன்றிலிருந்து இன்றுவரை எங்க தோட்டத்தில் காணப்படும் சகாயமாதா கிறிஸ்தவ தேவாலயத்திலேயே தங்கியிருக்கின்றோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.

தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெடிப்புக்கள் ஏற்பட்ட இடங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு சென்றார்கள். அவர்களின் பரிசோதனைகளுக்கிணங்க அவ்விடத்தில் எவ்வித ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லையென தெரிவிக்கின்றனர். எங்களுடைய வீடுகளுக்கே சென்று அங்கேயே வாழும்படி அவர்கள் கூறுகின்றனர்.

அதிக மழை பெய்தால் அங்கிருந்து இந்த தேவாலயத்துக்கே வந்துவிடுமாறும் கூறுகின்றனர். எங்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்கின்றார்கள். இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு இருப்பதற்கு மிகவும் கஸ்டமாக இருக்கின்றது.இந்த அரசாங்கம் எங்களின் பிரச்சினைகளை கண்டறிந்து உதவ முன்வர வேண்டும்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த திரேசாம்மாள் தெரிவிக்கையில்

கடந்த வருடம் நவம்பர் மாதம் 28ம் திகதியிலிருந்து இத்தேவாலயத்தில் தங்கி இருக்கின்றோம். மார்கழி பனி அதிகமாக பொழிகின்றது. இத்தேவாலயத்தினுள் எங்களால் இருக்கவே முடியவில்லை. இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. இங்கே எங்களோடு தங்கியிருந்த முதியவர் ஒருவர் குளிர் தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்தே போய்விட்டார். இதற்கு இந்த அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். இதேபோல இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ தெரியவில்லை.

எங்களுக்கு இங்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லா அரசியல் வாதிகளும் இங்கே வருகின்றார்கள் எங்களை பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால் யாருமே உதவி செய்வதாக இல்லை. அனுதாபம் மட்டுமே தெரிவிக்கின்றனர். நாங்களும் வீடு, வாசல் என வசதியாகவே வாழ்ந்தவர்கள். இந்த அனர்த்தத்தால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டோம். ஜனாதிபதி அவர்கள் எங்களுக்கு ஒரு காணியோ வழங்கவோ அல்லது வீடுகளை கட்டித்தரவோ முன்வரவேண்டும். நாங்கள் கௌரவ ஜனாதிபதியையே நம்பி இருக்கின்றோம்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் தெரிவிக்கையில்

இந்த முகாமில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் இருக் கின்றோம். ஒரு மாதத்திற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் இங்கு பரிசோதனை மேற்கொண்டனர்.அதன் பின்னர் மறுபடியும் கடந்த வாரமும் அவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேற்கொண்ட பரிசோதனைகளுக்கு ஏற்ப அவ்விடத்தில் பாரிய மண்சரிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் எங்களை மீண்டும் அவ்விடத்திற்கே செல்லுமாறும் கூறுகின்றனர். அதாவது நாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்கின்றனர்.

அங்கே மீண்டும் எவ்வித ஆபத்தும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். இந்த வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இந்த வீடுகள் கட்டும்போது ஒழுங்கான முறையோடு அடித்தளம் இடவில்லை என கூறுகின்றனர். அந்த வீடுகளிலே தற்போது பயம் இல்லாமல் வசிக்கலாம் என்கின்றனர். எங்களுக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். நாங்கள் உயிர் அச்சுறுத்தலுடனே வாழ்கின்றோம். அவ்விடத்திலுள்ள 26 வீடுகளிலும் பாரிய அளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நாங்கள் வேறு யாருடைய வீடுகளிலோ அல்லது உறவினர்களின் வீடுகளிலோ தங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆரம்பத்தில் அரசாங்கத் தினூடாகவும் நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன, ஆனால் இப்போது ஏதும் கிடைப்பதே இல்லை. நாங்கள் எங்களுடைய தொழிலையும் இழந்தே தவிக்கின்றோம்.75 மில்லிலீற்றர் -150 மில்லிமீற்றர்க்கும் அதிகமாக மழைபெய்தால் அவ்வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேறி இந்த தேவாலயத்திற்கு வந்து தங்குமாறு நுவரெலியா பிரதேச செயலக அதிகாரிகளும் தோட்ட அதிகாரியும் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகமும் எங்களை கண்டுக்கொள்வதே இல்லை, எனவே மழை அதிதமாக பெய்தால் வீடுகளிலிருந்து உடனே வெளியேறுங்கள் என்கின்றனர். கடுமையாக மழைபெய்யும் போது. எங்களுடைய சின்னஞ் சிறிய பிள்ளைகளை வைத்துக்கொண்டு எங்கே செல்வது.? சொல்லும் அதிகாரிகளுக்கு ஒரு நியாயம் வேண்டாமா? அதிக மழைபெய்தால் எங்களுடைய வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் புதையக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன. முடிவை தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எனவே இந்த அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எங்களுக்கு தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது இந்த அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் தெரிவிக்கையில்

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இதே எல்ஜின் தோட்டத்தில் தான். எனக்கு இப்போது 75 வயதாகின்றது.இதுவரை இவ்வாறானதொரு அனர்த்தத்தை பார்த்ததுவுமில்லை.எங்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டிருந்த 26 வீடுகளுமே பாரிய வெடிப்புக்குள்ளாகி இருக்கின்றன. தரையிலிருந்து சுவர் வரை பாரிய வெடிப்புக்குள்ளாகி இருக்கின்றன. எங்கள் தோட்ட அதிகாரி கூறுகின்றார். மேலே உள்ள மலையியிருந்து கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட பாரிய மணிசரிவு பாதியிலே நின்றுவிட்டது. இனி அந்த மண்மேடு சரிந்து வருவதற்கு வாய்ப்பில்லை என்கின்றார்.

எங்கள் தோட்ட அதிகாரி என்ன கடவுளா? என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே கணித்து விடுவாரோ? கிராம சேவகர் இந்த பக்கமே வருவதே இல்லை. எங்களுடைய பிரச்சினை தொடர்பாக அவருக்கு எதுவும் தெரியாதது போலவே இருக்கின்றார். எந்த ஒரு நிவாரணப் பொருட்களும் இதுவரை கிடைக்கவே இல்லை. ஒரு தடவை மாத்திரம் நிவாரணப் பொருட்கள் பிரதேச செயலகத்தினூடாக கொடுத்தார்கள். அதன் பிறகு எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எங்களுக்கு தொடர்ச்சியாக இந்த தேவாலயத்திலேயே தங்க இயலாது. இரவிலே இங்கு தூங்கவே முடியவில்லை. அதிக பனி பொழிகின்றது.

எனக்கு வயது 75 வயது என்னால் குளிர்தாங்க முடியவில்லை.எங்களுடன் சின்ன சின்ன பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த குளிரில் இரவில் இருக்க முடியவில்லை. அடிக்கடி காய்ச்சல் மற்றும் சலி தொல்லைக்குள்ளாகின்றனர். கடந்த வாரம் ஒகஸ்டின் என்பவர் கடுங் குளிர் தாங்க முடியாமல் இந்த முகாமிலே இறந்துவிட்டார். அவர் இறந்தது கூட ஏன் என்ன காரணத்தினால் இறந்தார் என்பதை கூட இந்த அரசாங்கம் கண்டுக்கொள்ள வில்லை.

இந்த அரசாங்கத்தையும் இந்த ஜனாதிபதியையும் நம்பி நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கு நல்ல இடத்தில் வீடுகளை கட்டித்தாருங்கள் இல்லையென்றால் காணிகளை தாருங்கள். நாங்கள் வீடுகளை கட்டிக் கொள்கின்றோம் என்றார். எங்களுக்கு தொழிலுக்கு போகவும் வழி கிடையாது. அதிக கஸ்டத்தின் மத்தியிலேயே இங்கு வாழ்கின்றோம். இந்த இடத்தில் மலகூடமும் இல்லை. குடிநீரும் இல்லை. ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் சென்றுதான் தண்ணீரை வாளிகளிலும் குஞங்களிலும் சுமந்து வருகின்றோம். மலசலகூடம் இல்லாமையால் கீழே உள்ள உறவினர்களின் வீடுகளுக்கே செல்கின்றோம் என்றார்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த உத்தரியமேரி தெரிவிக்கையில்

அக்கரப்பத்தனை பிரதேசத்துக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்திலேயே வசிக்கின்றோம். இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த முகாமில் தங்கியி ருக்கின்றோம். பாரிய சிரமத்துக்கு மத்தியிலேயே இந்த தேவலயத்திலே இருக்கின்றோம். மலசல கூடம் இல்லை, குடிநீர் இல்லை, எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆரம்பத்தில் எங்களுக்கு நிவாரணங்கள் கிடைத்தன. ஆனால் இப்போது எதுவும் கிடைப்பதில்லை. சின்ன பிள்ளைகளை வைத்துக்கொண்டு இவ்விடத்திலே தொடர்ந்தும் இருக்க முடியாது இரவில் பனி தொல்லை அதிகமாக இருக்கின்றது. கடும் குளிரான காலநிலை நிலவுகின்றது. எனவே எங்களின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த அரசாங்கம் எங்களுக்கு வீடுகளை அமைத்து தரவேண்டும்.

தலவாக்கலை குறூப் நிருபர் பி.கேதீஸ்

மரக்கறி விலைப்பட்டியல் (08.02.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (08.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

படைகள் இருப்பதாலேயே வடகிழக்கு மக்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனராம்: மொட்டு கட்சி விளக்கம்!

” வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

“சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறை மதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது.

ஆனால் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் சுதந்திரத்தினத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் அபிமானம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

படையினரின் வீரதீர செயல்கள் பற்றி பேசப்படவில்லை. நாட்டில் இன்று அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில் வடக்கு, கிழக்கில் கறுப்பு கொடி ஏற்றப்படுகின்றது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இராணுவ முகாம்கள் , பொலிஸ் (வடக்கு, கிழக்கில்) இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் அகற்றினால் பொலிஸையும் அகற்றுமாறு கோருவார்கள்.” – எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டார்.

உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி: மோடி புகழாரம்!

“ உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழியாகும். தமிழ் இலக்கியம் நித்தியமானது. தமிழ் பண்பாடு உலகளாவியது .”
இவ்வாறு இந்திய பிரதமர் நநேர்திர மோடி Narendra Modi தெரிவித்தார்.

மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே வந்து பிரதமர் அன்வர் இப்ராஹிம் Anwar Ibrahim வரவேற்றார்.

இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

‘‘இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது.
உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா.

இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் விஷயங்கள் பல உள்ளன. இங்குள்ள நீங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் உயிருள்ள பாலமாக இருக்கிறீர்கள்.

நம் மொழிகளில் நாம் பகிரும் பல வார்த்தைகளில் நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கிறோம்.

தமிழ் மொழி, உலகுக்கான இந்தியாவின் கொடை. தமிழ் இலக்கியம் நித்தியமானது, தமிழ் நண்பாடு உலகளாவியது.

தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர். நாம் ஒருவருக்கு ஒருவர் வெற்றிகளைக் கொண்டாடுகிறோம்.

சந்திராயன்-2 திட்டத்தின் வெற்றிக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இந்தியாவின் வெற்றி மலேசியாவின் வெற்றி. இது ஆசியாவின் வெற்றி. “ என்றார் மோடி.

 

4 நாட்களுக்குள் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

 

இலங்கைக்கு கடந்த 04  நாட்களுள் மாத்திரம் 40 ஆயிரத்து 54 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

பெப்ரவரி 1 முதல் 04 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 5 ஆயிரத்து 287 பேரும், பிரிட்டனில் இருந்து 5ஆயிரத்து 184 பேரும், ரஷ்யாவில் இருந்து3 ஆயிரத்து 817 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் 3 மில்லியனுக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

0
கிராந்துருகோட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 21 வயதுடைய இலக்கம் 143, சந்தன கம, தெஹிஅத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரும் , 23 வயதுடைய இலக்கம்...

அமைச்சர் விஜித ஹேரத் பெலருஸ், ரஷ்யாவுக்கு விஜயம்!

0
இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றார். பெலருஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கே அவர் விஜயம் செய்கின்றார். அடுத்த மாதம் நடுப்பகுதியில்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...