Home Blog Page 78

உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி: மோடி புகழாரம்!

“ உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழியாகும். தமிழ் இலக்கியம் நித்தியமானது. தமிழ் பண்பாடு உலகளாவியது .”
இவ்வாறு இந்திய பிரதமர் நநேர்திர மோடி Narendra Modi தெரிவித்தார்.

மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே வந்து பிரதமர் அன்வர் இப்ராஹிம் Anwar Ibrahim வரவேற்றார்.

இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

‘‘இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது.
உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா.

இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் விஷயங்கள் பல உள்ளன. இங்குள்ள நீங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் உயிருள்ள பாலமாக இருக்கிறீர்கள்.

நம் மொழிகளில் நாம் பகிரும் பல வார்த்தைகளில் நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கிறோம்.

தமிழ் மொழி, உலகுக்கான இந்தியாவின் கொடை. தமிழ் இலக்கியம் நித்தியமானது, தமிழ் நண்பாடு உலகளாவியது.

தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர். நாம் ஒருவருக்கு ஒருவர் வெற்றிகளைக் கொண்டாடுகிறோம்.

சந்திராயன்-2 திட்டத்தின் வெற்றிக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இந்தியாவின் வெற்றி மலேசியாவின் வெற்றி. இது ஆசியாவின் வெற்றி. “ என்றார் மோடி.

 

4 நாட்களுக்குள் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

 

இலங்கைக்கு கடந்த 04  நாட்களுள் மாத்திரம் 40 ஆயிரத்து 54 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

பெப்ரவரி 1 முதல் 04 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 5 ஆயிரத்து 287 பேரும், பிரிட்டனில் இருந்து 5ஆயிரத்து 184 பேரும், ரஷ்யாவில் இருந்து3 ஆயிரத்து 817 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் 3 மில்லியனுக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடைசி ஓவர்வரை போராடி தோற்றது நெதர்லாந்து!

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இந்த ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை நெதர்லந்து அணி பாகிஸ்தானுக்கு சவால் கொடுத்து அச்சுறுத்தியது.

‘குரூப்-ஏ’ பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த ஆட்டத்தில் பலப்பரீட்சை மேற்கொண்டன. இலங்கையின் கொழும்பில் இன்று (பிப்.7) காலை 11 மணி அளவில் இந்த ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. நெதர்லாந்து அணி முதலில் பேட் செய்து 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நெதர்லாந்து தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் 37 ரன்கள் எடுத்தார். லீட் 30 மற்றும் மைக்கேல் லெவிட் 24, கோலின் ஆக்கர்மேன் 20 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நவாஸ், அப்ரார் அகமது, சயிம் அயூப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஷாஹீன் அஃப்ரிடி 1 விக்கெட் எடுத்தார்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது பாகிஸ்தான். இதில் ஃபர்ஹான் 47, சயிம் அயூப் 24 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர். ஃபர்ஹான் ஆட்டமிழந்ததும் உஸ்மான் கான் (0), பாபர் அஸம் (15), முகமது நவாஸ் (6), ஷதாப் கான் (8) ஆகியோர் வெளியேறினர். நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வான் மெக்ரான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். லோகன் வான் பீக் மற்றும் க்ளென் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

19-வது ஓவரில் 3 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரி விளாசி பாகிஸ்தான் அணியின் வெற்றியை ஃபாஹிம் உறுதி செய்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஃபாஹிம் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் ஓ’தாவுத் நழுவவிட்டார்.

இறுதியாக 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஃபாஹிம் 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

“மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக, சட்ட பொறுப்பு இருக்கிறது”

பிரித்தானிய வர்த்தக நோக்கங்களுக்காக, இலங்கையில் பெருந்தோட்டங்களை அமைக்க, தென் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வம்சாவளிகளான இன்றைய மலையக தமிழர்கள் தொடர்பில், பிரித்தானியாவுக்கு உள்ள தார்மீக மற்றும் சட்ட கடப்பாடுகளை நான், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கை சந்தித்து மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளேன்.

அதேபோல், இன்றைய, என்பிபி அரசு முன்னேடுக்கும், தித்வா மீள் கட்டுமான வீடமைப்பு மற்றும் காணி வழங்கல் ஆகிய அரசாங்க நிவாரண திட்டங்களில் பாதிக்க பட்டுள்ள மலையக மக்கள் ஒதுக்கி வைக்கபட்டுள்ளார்கள் எனவும், அதேபோல் வடக்குக்கு அரசாங்க தலைவர்கள் அடிக்கடி சென்று வருவதை விட, அரசியல் கைதிகள் விடுதலை, புதிய அரசியலமைப்பு, பயங்கரவாத தடை சட்ட நீக்கம், மாகாண சபை சபை தேர்தல் நடத்தல், காணி விடுவிப்பு, ஆகிய அனைத்தையும் அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது எனவும், உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்குக்கு எடுத்து கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவரின் வசிப்பிடமான வெஸ்ட் மின்ஸ்டர் இல்லத்தில் , உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்குக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்தது. இதன் போது, ஜனநாயக மக்கள் முன்னணியின், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான இணை தலைவரும், தமுகூ அரசியல் குழு உறுப்பினருமான பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன், தனது எக்ஸ் தளம் உட்பட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது;

மலையக தமிழர்:

குறிப்பாக, இன்றைய, அரசு முன்னேடுக்கும், ரூபா 50 இலட்ச தித்வா மீள் கட்டுமான வீடமைப்பு மற்றும் காணி வழங்கல் ஆகிய அரசாங்க நிவாரண திட்டங்களில் பாதிக்க பட்டுள்ள மலையக மக்கள் ஒதுக்கி வைக்கபட்டுள்ளார்கள்.

ஏனைய மக்களுக்கு வழங்க படும் தித்வா வீடமைப்பு நிவாரணங்கள் நமது மக்களுக்கு இல்லை. கண்டி, பதுளை, நுவரேலியா, மாத்தளை, கேகாலை, ஆகிய மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பெருந்தோட்ட மக்கள், தேசிய இடர் நிவாரண நிலையத்தின் கீழ் கொண்டு வர படாமல், ரூபா 27 இலட்ச இந்திய உதவி வீடமைப்பு திட்டங்களுக்கு உள்ளே தள்ள படுகிறார்கள்.

நாம் என்ன இந்திய பிரஜைகளா? இது இரண்டாம் தர இலங்கை குடியுரிமை இல்லையா? இது தென்னாபிரிக்காவில் காணப்பட்ட “அபார்தைட்” என்ற இன ஒதுக்கல் ஆகும் என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன்.

மேலும், இன்று மலைநாட்டில், காணியுரிமையை மறுத்து, தொடர்மாடி கட்ட இந்த அரசாங்கம் இரகசிய திட்டம் தீட்டுகிறது. காணி உரிமை மறுக்க படும் எந்த ஒரு அரசாங்க திட்டத்தையும் நாம் ஏற்று கொள்ள போவதில்லை. இவற்றுக்கு எதிராக நாம் மக்களை அணி திரட்டி போராடுவோம்.

ஜனாதிபதி அனுர, மிக அழகாக பேசுகிறார். ஆனால், மலையக அப்பாவி மக்களின் விசேட பிரச்சினைகள் தொடர்பில் கலந்து உரையாட நேரம் ஒதுக்குங்கள் என, அவரது இருபது வருட நண்பராகிய நான், கடந்த வருடம் டிசம்பர் 14ம் திகதியே, அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு, இதுவரை பதிலும் இல்லை. கலந்துரையாடலுக்கு நேரமும் ஒதுக்க படவில்லை. இது என்ன நியாயம்.

ஆகவே, மலையக தமிழருக்கு நியாயம் பெற்று தருவதில், அவர்களின் குடியுரிமை முழு குடியுரிமையாக வழங்க படுவதில், அவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்த படுவது நிறுத்த படுவதில், அவர்களுக்கு இரண்டு நூற்றாண்டுகளாக மறுக்க பட்டு வரும் காணி உரிமையை உறுதி படுத்துவதில், சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகிக்க வேண்டும் என நான் கோருகிறேன்.

ஈழத்தமிழர்:

ஜனாதிபதி அடிக்கடி வடக்குக்கு போய் வருகிறார். அங்கே பொங்கல் கொண்டாடுகிறார். இளைஞர்களுடன் “செல்பி” எடுக்கிறார். காலையில் நடை பயிற்சி செய்கிறார். மக்களுடன் உரையாடுகிறார். ஆனால் அங்கே தான் செய்து தருவதாக வாக்களித்த அனைத்தையும் காலவரை இன்றி இன்று அவர் ஒத்தி வைத்து விட்டார்.

உறுதி அளித்த மாகாணசபை தேர்தல் இல்லை. மாகாணசபை நிர்வாகம் ஆளுநர்கள் மூலம் நடத்த படுகிறது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் என்றார்கள். இன்று நீக்கம் இல்லையாம். இன்னொரு புதிய சட்டம் கொண்டு வர முயல்கிறார்கள். காணி விடுவிப்பு நின்று போய் விட்டது. அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள். இன்று எஞ்சி உள்ள பன்னிரெண்டு நீண்டகால கைதிகளை விடுவிக்க மறுக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பு பேச்சுகளை இதோ, அதோ, ஆரம்பிப்போம் என்றார்கள். அனைத்தும் அலங்கார வார்த்தைகளுடன் தொக்கி நிற்கின்றன.

ஆகவே, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என நான் கோருகிறேன்.

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்கான டிஜிட்டல் வேலைத்திட்டத்திற்கு இணக்கம்

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்கான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரச வருமான நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையே கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் வருமான சேகரிப்பை அதிகரிப்பது, இந்தக் கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாகும்.

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை, புதிய மறுசீரமைப்புகள் மற்றும் நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் செயற்திறனை அதிகரித்தல், மனிதவள மேம்பாடு மற்றும் அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். பி. என். ஏ. பிரேமரத்ன உட்பட அதன் சிரேஷ்ட அதிகாரிகள், மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மக்கள் ஆசியுடனேயே ஆட்சி தொடரும்: சூழ்ச்சி எதுவும் செய்யமாட்டோம்!!

“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என்று ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம். அதனை செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் ஆசியுடன் ஆட்சியை தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம். ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு சூழ்ச்சி செய்ய மாட்டோம்.

அதிகாரத்தை நாம் மோசடிக்காக பயன்படுத்தவில்லை. நாட்டுக்காகவே பயன்படுத்துகின்றோம். நாட்டுக்கு சேவைசெய்த திருப்தியுடன் மரணிக்க வேண்டும். அது போதும்.

மக்கள் ஆசியுடன் எமது ஆட்சி தொடரும். நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.” – எனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

நாமல் போன்றவர்கள் இனவாத அரசியல் செய்ய இடமளிக்கப்படமாட்டாது!

இனவாதத்துக்கு இந்நாட்டில் இடமில்லை. நாமல் ராஜபக்ச போன்றவர்கள் இனவாத அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லக்மாலி எம்.பி. கூறியவை வருமாறு,

“ இனத்துக்காகவும், மதத்துக்காகவும் முன்னிலையாகும் அரசியல்வாதி தான்தான் என காட்டிக்கொள்வதற்கு நாமல் ராஜபக்ச முற்படுகின்றார்.

தெற்கில் வாக்குகேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்துணிவற்ற நபரே இன்று வீரவசனம் பேசி அழைக்கின்றார்.

மக்களைப் பற்றி கதைப்பதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. நாட்டை நாசமாக்கிய கூட்டமே தற்போது இனவாத அரசியலை முன்னெடுக்க முற்படுகின்றது.

சிங்கள், பௌத்த மக்கள் நேர்மையானவர்கள். ஆனால் சிங்கள, பௌத்த மக்கள் எனக் காட்டிக்கொள்ளும் இந்த அரசியல்வாதிகளே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர்.
இனவாதத்துக்கு இனி இடமில்லை. நாமலின் இனவாத அரசியல் இனியும் எடுபடாது.” – என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (07.02.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (07.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

அவசரகாலச் சட்டம் ஒருபோதுமே அடக்குமுறை கருவியாக மாறாது!

மீள்கட்டியெழுப்பும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும், அது ஒருபோதும் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டி நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற டித்வா சூறாவளியால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களின் மீள்குடியமர்த்துவதற்காகக்  காணி வழங்குதல் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தல் மற்றும் புதிய வீட்டின் நிர்மாணப் பணிகளைத் தொடங்குதல் ஆகியவற்றிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

தும்பனை, ஹரிஸ்பத்துவ, ஹதரலியத்த, பூஜாபிட்டிய மற்றும் யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 146 குடும்பங்களுக்கு இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, முதல் கட்டமாக, வீடுகளை நிர்மாணிப்பதற்காக இருபது இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளைக் கொண்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக மூன்று இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும், சேதமடைந்த வர்த்தகங்களை மீளமைப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

மேலும், நியங்கொட பிரிவேனா பாடசாலைக்கு கட்டடம் ஒன்றும் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

“நமது அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு அரசியல் மேடையிலும் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதே முக்கிய தலைப்பாக இருந்தது. முன்னாள் தலைவர்கள் அதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அதன்படி, நமது நாட்டில் அரசாங்கங்கள் மாறியபோது, மோசடி மற்றும் ஊழல் ஒரு முக்கிய தலைப்பாக மாறியது. நமது நாட்டின் அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் மோசடி மற்றும் ஊழல் பற்றிய ஒரு முழக்கம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

மேலும், இந்நாட்டின் அரசியல் மேடையில் ஜனநாயகம் ஒரு முக்கிய தலைப்பாக மாறிவிட்டது. தேர்தல்களை ஒத்திவைப்பது, பத்திரிகையாளர்களைக் கொல்வது, வீதிகளில் இடம்பெறும் கொலைகள் பற்றிப் பேசப்பட்டது. இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாது. அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகம் பற்றிய முழக்கத்தை எழுப்ப வாய்ப்பு இருக்காது.

மேலும், அரசியல் மேடைகளில் பொருளாதார வீழ்சிச பற்றி தொடர்ந்து பேசப்பட்டது. நமக்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகள் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது பற்றிய முழக்கங்களை அரசியல் மேடையில் முன்வைக்க வாய்ப்பு இருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்த நாட்டில் வறுமையை நாம் ஒழித்து வருகின்றோம்.

மேலும், சர்வதேச உறவுகள் வலுவாக இல்லாததால் அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டுள்ளன. நாங்கள் மிகவும் வலுவான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். எனவே, பலர் இப்போது நாட்டுக்குச் சாதகமான அரசியல் கோஷங்களை இழந்துவிட்டனர். எனவே, அவர்கள் அதிகாரத்துக்கான ஒரே பாதையாக இனவாதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த நாட்டை எப்படிக் கட்டியெழுப்புவது என்பது குறித்த தொலைநோக்குப் பார்வை நமக்கு உள்ளது. எந்த நாட்டைக் கட்டியெழுப்பினாலும், அந்த நாட்டின் வரலாறும், அந்த நாடு எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது என்பதும் முக்கியம். எந்த நாடும் அந்த நாடு கட்டியெழுப்பப்பட்ட அடித்தளத்தின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களையும் பொருளாதார உத்திகளையும் வகுக்கின்றன.

எனவே, நமது கடந்த கால பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய உலகத்துடன் இணக்கமான ஒரு புதிய பொருளாதார மாற்றத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த பூமியில் வேரூன்றி, இயற்கையாக இணைக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதன் மூலம் எங்கள் பொருளாதார உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, பௌத்த மதம் பற்றியும் நமது வரலாறு குறித்தும் நம்மிடம் இருப்பது அரசியல் மேடையில் பாரிமாற வேண்டிய கோஷங்கள் அல்ல, நமது நாடு கட்டியெழுப்பப்பட்ட  கடந்த காலத்துடன் தொடர்புகளைப் பேணி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இன்று, அரசுக்கு மாத்திரமே அரசியல், தொலைநோக்கு மற்றும் கருத்தியல் இருக்கின்றது. இறைச்சி துண்டைச் சுற்றி கூடும் காகங்களின் கூட்டம் போல மற்றவர்கள் எந்த நேரத்திலும் வரும் ஏதோ ஒன்றை பிடித்துக்கொள்கின்றார்கள், ஆனால் நாங்கள் ஒரு நல்ல தொலைநோக்கு பார்வையுடன் செயற்படுகின்றோம்.

டித்வா சூறாவளி நமது நாட்டின் மக்களுக்கும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்படும் போது, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் சாதாரண சட்டம் போதுமானதாக இல்லை. ஒரு விசேட சட்டம் தேவை.

விசேட  சட்டங்களை இயற்றுவதற்குத் தேவையான அதிகாரங்களை அரசமைப்பு வழங்குகின்றது. பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் சிறப்புச் சட்டங்களை இயற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. இது போன்ற பேரழிவிலிருந்து மீள்வதற்கு, சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் தேவை. அதனால்தான் அவசரகாலச் சட்டத்தை விதித்தோம். ஆனால் வரலாற்றில், அவசரகாலச் சட்டங்கள் பெரும்பாலும் தொழிற்சங்க இயக்கங்களைப் பலவீனப்படுத்தவும், ஊடகங்களை அடக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த நோக்கத்துக்காக நாங்கள் அவசரகாலச் சட்டத்தைப்  பயன்படுத்தவில்லை. இந்தக் கட்யெழுப்பும் செயல்முறை இன்னும் முடிவடையாததால், அடிப்படைப் பணிகள் முடியும் வரை அவசரகாலச் சட்டத்தை நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம்.

அது ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனவே, கொள்வனவு செயல்முறை, விலைக்கு வாங்குதல் மற்றும் காணி கையகப்படுத்துதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கும், அரச அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், மிக விரைவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய பகுதிகளுக்கும் தேவையான சட்டப் பாதுகாப்பை நாங்கள் வழங்கி வருகின்றோம். இது ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது.

நமது நாடு வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் ஒரு குழு உள்ளது. ஆனால், எந்தவொரு பேரழிவையும், எந்தவொரு சரிவையும் தாங்கக்கூடிய நாடாக இந்த நாட்டை நாம் உருவாக்குகின்றோம். ஒரு பேரழிவுக்கு முகங்கொடுக்க, நாம் ஒன்றுபட வேண்டும். நாம் தனியாக நின்றால், நமது சக்தி பலவீனமாகும். நாம் ஒன்றுபட்டால், நாம் பலமடைவோம்.

எனவே, நம்மிடையே உள்ள உள் முரண்பாடுகளையும் மோதல்களையும் வென்று நம்மை ஒரே தேசமாக கட்டியெழுப்ப வேண்டும். நீண்ட காலமாக, உள் மோதல்களால் நாம் பலவீனமடைந்தோம். உள் மோதல்கள் நமது பலத்தைக் குறைக்கின்றன. சிறிய துரும்புகள் ஒன்றிணைந்து பெரும் பலத்தைக் கொண்டுவருவது போல, நாட்டின் அனைத்து மக்களும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டின் முதல் பலம் நமது ஒற்றுமையில்தான் உள்ளது. அதனால்தான் நாம் அதற்காக கடுமையாக உழைக்கிறோம்.

இன்று, முதல் முறையாக, இலங்கையில் ஒரு அரசாங்கம் வடக்கு மக்களின் கௌரவத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு கொழும்பில் இயங்கும் அரசின் மீது எப்போதும் சந்தேகங்கள் இருந்தன. இன்று, அந்த சந்தேகம் நீங்கியுள்ளது. இது ஒரு சிறந்த சூழ்நிலை. வடக்கில் இனவாத அரசியல் இயக்கங்களின் இருப்பு நின்றுவிட்டது. பிரதேசம் மற்றும் எல்லைகளால் ஒன்றுபட்டாலும் ஒரு நாடாக ஒன்றுபடாது. அந்த நாடு ஒன்றுபட, அந்த நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டைக் கட்டியெழுப்பும் முக்கிய பணி இதுதான்.

இனவாதத்தை யார் வேண்டுமானாலும் பரப்பலாம். இன்று மிகச் சிறிய குழுவே அதை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் நம் நாட்டின் உண்மையான பௌத்த மக்கள் அதற்கு பலியாக மாற மாட்டார்கள். வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதத்துக்கு மீண்டும் இடம் கொடுக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் அதற்காக பாடுபடுகின்றோம். அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என்று நான் தெரிவிக்கின்றேன்.

ஊழல் இல்லாத ஆட்சி, ஜனநாயகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோசமாக இனவாதம் மாறிவிட்டது. இனவாதத்துக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் நமது மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்று வருகின்றது. இதுதான் உண்மையான பௌத்த மதம். இரக்கம் மற்றும் கருணைக்கு முன்னுரிமை அளிக்கும் மதம் ஒரு மோதலாக மாறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே, பௌத்த மதம் மற்றும் அனைத்து மதங்களின் பண்புகள் மற்றும் அடித்தளங்களைக் கொண்ட ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காக நாங்கள் போராடுகின்றோம்.” – என்றார்.

வண. கல்லேல்லே சுமனசிறி நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க உள்ளிட்ட கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

டி20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.

இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை லீக் சுற்று போட்டிகள் நடக்கின்றன. சூப்பர் 8 சுற்று பிப்ரவரி 21-ம் கதி முதல் மார்ச் 1-ம் கதிவரை நடைபெற உள்ளது.

மார்ச் 4-ம்திகதி முதல் அரையிறுதி, 5-ம் திகதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் முதல் அரையிறுதி கொழும்பில் நடக்கும்.

இல்லையென்றால் இந்தியாவில் நடத்தப்படும். 2வது அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடக்கும். இல்லையெனில் அகமதாபாத்தில் மார்ச் 8-ம் திகதி நடத்தப்படும்.

லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகளும், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகளும் நடக்கிறது.

முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. கொழும்பில் காலை 11 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-நெதர்லாந்தும், மாலை 3 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் வெஸ்ட்இண்டீஸ்-ஸ்காட்லாந்தும், இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகளும் மோதுகின்றன.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியென ஈரான் கொண்டாட்டம்!

0
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஆட்சியாளர்கள் தங்களின் மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதே தங்களின் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று...

போர் நிறுத்தம்: ஐ.நா. வரவேற்பு!

0
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வரவேற்றுள்ளார். பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டவும், பொதுமக்களின் உயிர்களைக் காக்கவும் போர் நிறுத்தம் மிகவும் அவசியம் என்று...

விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

0
கிராந்துருகோட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 21 வயதுடைய இலக்கம் 143, சந்தன கம, தெஹிஅத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரும் , 23 வயதுடைய இலக்கம்...