Home Blog Page 79

அவசரகாலச் சட்டம் ஒருபோதுமே அடக்குமுறை கருவியாக மாறாது!

மீள்கட்டியெழுப்பும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும், அது ஒருபோதும் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டி நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற டித்வா சூறாவளியால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களின் மீள்குடியமர்த்துவதற்காகக்  காணி வழங்குதல் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தல் மற்றும் புதிய வீட்டின் நிர்மாணப் பணிகளைத் தொடங்குதல் ஆகியவற்றிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

தும்பனை, ஹரிஸ்பத்துவ, ஹதரலியத்த, பூஜாபிட்டிய மற்றும் யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 146 குடும்பங்களுக்கு இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, முதல் கட்டமாக, வீடுகளை நிர்மாணிப்பதற்காக இருபது இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளைக் கொண்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக மூன்று இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும், சேதமடைந்த வர்த்தகங்களை மீளமைப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

மேலும், நியங்கொட பிரிவேனா பாடசாலைக்கு கட்டடம் ஒன்றும் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

“நமது அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு அரசியல் மேடையிலும் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதே முக்கிய தலைப்பாக இருந்தது. முன்னாள் தலைவர்கள் அதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அதன்படி, நமது நாட்டில் அரசாங்கங்கள் மாறியபோது, மோசடி மற்றும் ஊழல் ஒரு முக்கிய தலைப்பாக மாறியது. நமது நாட்டின் அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் மோசடி மற்றும் ஊழல் பற்றிய ஒரு முழக்கம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

மேலும், இந்நாட்டின் அரசியல் மேடையில் ஜனநாயகம் ஒரு முக்கிய தலைப்பாக மாறிவிட்டது. தேர்தல்களை ஒத்திவைப்பது, பத்திரிகையாளர்களைக் கொல்வது, வீதிகளில் இடம்பெறும் கொலைகள் பற்றிப் பேசப்பட்டது. இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாது. அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகம் பற்றிய முழக்கத்தை எழுப்ப வாய்ப்பு இருக்காது.

மேலும், அரசியல் மேடைகளில் பொருளாதார வீழ்சிச பற்றி தொடர்ந்து பேசப்பட்டது. நமக்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகள் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது பற்றிய முழக்கங்களை அரசியல் மேடையில் முன்வைக்க வாய்ப்பு இருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்த நாட்டில் வறுமையை நாம் ஒழித்து வருகின்றோம்.

மேலும், சர்வதேச உறவுகள் வலுவாக இல்லாததால் அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டுள்ளன. நாங்கள் மிகவும் வலுவான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். எனவே, பலர் இப்போது நாட்டுக்குச் சாதகமான அரசியல் கோஷங்களை இழந்துவிட்டனர். எனவே, அவர்கள் அதிகாரத்துக்கான ஒரே பாதையாக இனவாதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த நாட்டை எப்படிக் கட்டியெழுப்புவது என்பது குறித்த தொலைநோக்குப் பார்வை நமக்கு உள்ளது. எந்த நாட்டைக் கட்டியெழுப்பினாலும், அந்த நாட்டின் வரலாறும், அந்த நாடு எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது என்பதும் முக்கியம். எந்த நாடும் அந்த நாடு கட்டியெழுப்பப்பட்ட அடித்தளத்தின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களையும் பொருளாதார உத்திகளையும் வகுக்கின்றன.

எனவே, நமது கடந்த கால பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய உலகத்துடன் இணக்கமான ஒரு புதிய பொருளாதார மாற்றத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த பூமியில் வேரூன்றி, இயற்கையாக இணைக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதன் மூலம் எங்கள் பொருளாதார உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, பௌத்த மதம் பற்றியும் நமது வரலாறு குறித்தும் நம்மிடம் இருப்பது அரசியல் மேடையில் பாரிமாற வேண்டிய கோஷங்கள் அல்ல, நமது நாடு கட்டியெழுப்பப்பட்ட  கடந்த காலத்துடன் தொடர்புகளைப் பேணி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இன்று, அரசுக்கு மாத்திரமே அரசியல், தொலைநோக்கு மற்றும் கருத்தியல் இருக்கின்றது. இறைச்சி துண்டைச் சுற்றி கூடும் காகங்களின் கூட்டம் போல மற்றவர்கள் எந்த நேரத்திலும் வரும் ஏதோ ஒன்றை பிடித்துக்கொள்கின்றார்கள், ஆனால் நாங்கள் ஒரு நல்ல தொலைநோக்கு பார்வையுடன் செயற்படுகின்றோம்.

டித்வா சூறாவளி நமது நாட்டின் மக்களுக்கும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்படும் போது, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் சாதாரண சட்டம் போதுமானதாக இல்லை. ஒரு விசேட சட்டம் தேவை.

விசேட  சட்டங்களை இயற்றுவதற்குத் தேவையான அதிகாரங்களை அரசமைப்பு வழங்குகின்றது. பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் சிறப்புச் சட்டங்களை இயற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. இது போன்ற பேரழிவிலிருந்து மீள்வதற்கு, சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் தேவை. அதனால்தான் அவசரகாலச் சட்டத்தை விதித்தோம். ஆனால் வரலாற்றில், அவசரகாலச் சட்டங்கள் பெரும்பாலும் தொழிற்சங்க இயக்கங்களைப் பலவீனப்படுத்தவும், ஊடகங்களை அடக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த நோக்கத்துக்காக நாங்கள் அவசரகாலச் சட்டத்தைப்  பயன்படுத்தவில்லை. இந்தக் கட்யெழுப்பும் செயல்முறை இன்னும் முடிவடையாததால், அடிப்படைப் பணிகள் முடியும் வரை அவசரகாலச் சட்டத்தை நாங்கள் செயற்படுத்தி வருகின்றோம்.

அது ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனவே, கொள்வனவு செயல்முறை, விலைக்கு வாங்குதல் மற்றும் காணி கையகப்படுத்துதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கும், அரச அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், மிக விரைவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய பகுதிகளுக்கும் தேவையான சட்டப் பாதுகாப்பை நாங்கள் வழங்கி வருகின்றோம். இது ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது.

நமது நாடு வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் ஒரு குழு உள்ளது. ஆனால், எந்தவொரு பேரழிவையும், எந்தவொரு சரிவையும் தாங்கக்கூடிய நாடாக இந்த நாட்டை நாம் உருவாக்குகின்றோம். ஒரு பேரழிவுக்கு முகங்கொடுக்க, நாம் ஒன்றுபட வேண்டும். நாம் தனியாக நின்றால், நமது சக்தி பலவீனமாகும். நாம் ஒன்றுபட்டால், நாம் பலமடைவோம்.

எனவே, நம்மிடையே உள்ள உள் முரண்பாடுகளையும் மோதல்களையும் வென்று நம்மை ஒரே தேசமாக கட்டியெழுப்ப வேண்டும். நீண்ட காலமாக, உள் மோதல்களால் நாம் பலவீனமடைந்தோம். உள் மோதல்கள் நமது பலத்தைக் குறைக்கின்றன. சிறிய துரும்புகள் ஒன்றிணைந்து பெரும் பலத்தைக் கொண்டுவருவது போல, நாட்டின் அனைத்து மக்களும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டின் முதல் பலம் நமது ஒற்றுமையில்தான் உள்ளது. அதனால்தான் நாம் அதற்காக கடுமையாக உழைக்கிறோம்.

இன்று, முதல் முறையாக, இலங்கையில் ஒரு அரசாங்கம் வடக்கு மக்களின் கௌரவத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு கொழும்பில் இயங்கும் அரசின் மீது எப்போதும் சந்தேகங்கள் இருந்தன. இன்று, அந்த சந்தேகம் நீங்கியுள்ளது. இது ஒரு சிறந்த சூழ்நிலை. வடக்கில் இனவாத அரசியல் இயக்கங்களின் இருப்பு நின்றுவிட்டது. பிரதேசம் மற்றும் எல்லைகளால் ஒன்றுபட்டாலும் ஒரு நாடாக ஒன்றுபடாது. அந்த நாடு ஒன்றுபட, அந்த நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டைக் கட்டியெழுப்பும் முக்கிய பணி இதுதான்.

இனவாதத்தை யார் வேண்டுமானாலும் பரப்பலாம். இன்று மிகச் சிறிய குழுவே அதை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் நம் நாட்டின் உண்மையான பௌத்த மக்கள் அதற்கு பலியாக மாற மாட்டார்கள். வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதத்துக்கு மீண்டும் இடம் கொடுக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் அதற்காக பாடுபடுகின்றோம். அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என்று நான் தெரிவிக்கின்றேன்.

ஊழல் இல்லாத ஆட்சி, ஜனநாயகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோசமாக இனவாதம் மாறிவிட்டது. இனவாதத்துக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் நமது மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்று வருகின்றது. இதுதான் உண்மையான பௌத்த மதம். இரக்கம் மற்றும் கருணைக்கு முன்னுரிமை அளிக்கும் மதம் ஒரு மோதலாக மாறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே, பௌத்த மதம் மற்றும் அனைத்து மதங்களின் பண்புகள் மற்றும் அடித்தளங்களைக் கொண்ட ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காக நாங்கள் போராடுகின்றோம்.” – என்றார்.

வண. கல்லேல்லே சுமனசிறி நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க உள்ளிட்ட கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

டி20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.

இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை லீக் சுற்று போட்டிகள் நடக்கின்றன. சூப்பர் 8 சுற்று பிப்ரவரி 21-ம் கதி முதல் மார்ச் 1-ம் கதிவரை நடைபெற உள்ளது.

மார்ச் 4-ம்திகதி முதல் அரையிறுதி, 5-ம் திகதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் முதல் அரையிறுதி கொழும்பில் நடக்கும்.

இல்லையென்றால் இந்தியாவில் நடத்தப்படும். 2வது அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடக்கும். இல்லையெனில் அகமதாபாத்தில் மார்ச் 8-ம் திகதி நடத்தப்படும்.

லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகளும், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகளும் நடக்கிறது.

முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. கொழும்பில் காலை 11 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-நெதர்லாந்தும், மாலை 3 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் வெஸ்ட்இண்டீஸ்-ஸ்காட்லாந்தும், இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகளும் மோதுகின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா!

 

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (06) சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

டித்வா புயலின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு டில்வின் சில்வா நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கான தமது நாட்டு ஆதரவை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியாவின் உதவிகள் தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (06) சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

டித்வா புயலின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு டில்வின் சில்வா நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கான தமது நாட்டு ஆதரவை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியாவின் உதவிகள் தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார்.

கண்டி-கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

 

பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

2021 ஆம் ஆண்டு ஹங்கேரிய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 14.37 பில்லியன் ரூபா ஆகும். அண்மைய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ஹங்கேரிய அரசாங்கத்தின் கடன் உதவி இடைநிறுத்தப்பட்டதுடன், மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.

அதன்படி, 12.27 பில்லியன் ரூபா உள்நாட்டு நிதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை, 22 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் வில்லியம் கோபல்லாவ மாவத்தை வழியாக நிர்மாணிக்கப்படுவதோடு, கன்னொருவ வீதியில் மகாவலி ஆற்றின் வலது கரையில் இருந்து தொடங்கி, கெட்டம்பே சந்தி மற்றும் புகையிரதப் பாதைக்கு மேலால் நிர்மாணிக்கப்படும். இந்த மேம்பாலம் 374 மீட்டர் நீளம் கொண்டதுடன், புகையிரதப் பாதை வரை இருவழிப் பாதைகளாக நிர்மாணிக்கப்படும்.

பேராதனை வீதி ஊடாக நிர்மாணிக்கப்படும் கிளை மேம்பாலம், புகையிரதப் பாதைக்கு மேலால் உள்ள பிரதான மேம்பாலத்துடன் இணைக்கப்பட்டு, மூன்று வழிப் பாதையாக பிரதான மேம்பாலம், வில்லியம் கோபல்லாவ வீதியுடன் இணையும் வகையில் நிர்மாணிக்கப்படும்.

இந்த கிளை மேம்பாலத்தின் நீளம் 172 மீட்டர் மற்றும் அகலம் 6.5 மீட்டர் ஆகும். இந்த கிளை மேம்பாலம் நிர்மாணிக்கப்படுவதால், கண்டியிலிருந்து வில்லியம் கோபல்லாவ வீதியில் பேராதனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் புகையிரதக் கடவையில் எதிர் கொள்ளாமல் பயணிக்க முடியும்.

பிரதான மேம்பாலத்தின் இருவழிப் பாதைப் பகுதியின் அகலம் 9.4 மீட்டர் ஆகும், மேலும் 03 வழிப்பாதைப் பகுதியின் அகலம் 12.9 மீட்டர்.

திட்டத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, திட்ட அதிகாரிகளுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு!

“அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், அவசரகால சட்டத்தை இந்த அரசாங்கம் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்துகின்றது எனவும் குற்றஞ்சாட்டினார்.
எனினும், ரஞ்சித் மத்தும பண்டாரவின் இந்த குற்றச்சாட்டை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நிராகரித்தார்.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே அவசர கால சட்டம் நீடிக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

நாம் தமிழர்களுக்கு எதிராக போர் தொடுக்க வில்லை: புலிகளை ஒழித்தது இனவாதம் கிடையாது!

“நாம் தமிழர்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே போர் இடம்பெற்றது. எனவே, புலிகள் அமைப்பை தோற்கடித்தமை இனவாதம் கிடையாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்தது தொடர்பில் சுதந்திர தின நிகழ்வில் பெருமையாகக் கூறப்படவில்லை. அதைவிடுத்து டித்வா புயல் பற்றியே வர்ணனை வழங்கப்பட்டது.

சில நாடுகளில் முதலாம் உலகம்போரில் கிடைத்த வெற்றி தொடர்பில்கூட இன்றளவிலும் பேசப்படுகின்றது.” -எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

எனவே, குறைந்த பட்சம் போர் காலத்தில் எமது நாட்டில் ஒவ்வொரு படைப்பிரிவும் வழங்கிய பங்களிப்பு பற்றியாவது கதைத்திருக்கலாம்.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது இனவாதமாக அரசு கருதுகின்றது போலும். இது இனவாதம் அல்ல. நாம் தமிழ் மக்களுக்கு எதிராக போர் செய்யவில்லை.

ஒருபோதும் அழிக்க முடியாது எனக் கூறப்பட்ட பயங்கரவாத அமைப்பையே எமது படையினர் தோற்கடித்தனர். இதனை கூறுவதற்கு அரச தலைவருக்கு முதுகெலும்பில்லை.”- என நாமல் மேலும் கூறினார்.

இலங்கைக்கு மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் கப்பலில் எடுத்து வரப்பட்ட, 10 பெய்லி பாலங்கள், நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சத்யஞ்சல் பாண்டே, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்குவிடம் இந்த பாலங்களை ஒப்படைத்துள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவினால் 5 மில்லியன் டொலர் மானிய உதவியின் கீழ், இந்த பாலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்குப் பயணம் செய்தபோது அறிவிக்கப்பட்ட இந்தியாவின் 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு உதவிப் பொதியின் ஒரு பகுதியாக பெய்லி பாலங்களின் விநியோகம் அமைந்துள்ளது.

புதிதாக வழங்கப்பட்ட பாலங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் நிறுவப்படும்.

இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இந்திய இராணுவ பொறியாளர்கள் இந்தப் பாலங்களைப் பொருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஈரானில் இருந்து உடன் வெளியேறுக: அமெரிக்காவின் உத்தரவால் பரபரப்பு!

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனே வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் அவசரமாக அறிவுறுத்தி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவும் நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அவற்றை ஒடுக்க அரசு எடுத்த நடவடிக்கையால் வன்முறை ஏற்பட்டது.

இதில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் விரைந்தன.

இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சு நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அவசரமாக அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானில் பதற்ற சூழல் அதிகரித்து வருகிறது.

அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்படுதல், போக்குவரத்து இடையூறுகள், தடுத்து வைக்கப்படும் அபாயங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க குடிமக்கள் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறது என மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் ஈரானில் விசாரணை, கைது மற்றும் தடுப்புக்காவல் அபாயத்திற்கு உள்ளாகக்கூடும். அங்கு அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து இணைய தடைகளையும் எதிர்கொள்ளலாம்
விமானங்கள் ரத்து மற்றும் இடையூறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஈரானில் இருந்து வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை போதுமானதாக வைத்து கொள்ள வேண்டும ” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் அரசமைப்புக்கு முரண் அல்ல!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, சாதாரண பெரும்பான்மையுடன் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதியுடன் அதற்குரிய வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த பின்னர், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதா சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும்”

0
நாட்டில் எரிபொருள் விலையேற்றம் குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு நிலவுகின்ற கால கட்டத்தில் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் மத்தியில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து ஒத்துழைக்க வேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும்...

நெதன்யாகு பெயில்: இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் காட்டம்!

0
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் போர் மேலாண்மையை அணுகுமுறையை அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் யாயிர் லாபிட் Yair Lapid கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்த உடன்படிக்கையை நெதன்யாகு ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட லாபிட்,...

மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியென ஈரான் கொண்டாட்டம்!

0
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஆட்சியாளர்கள் தங்களின் மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதே தங்களின் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று...