Home Blog Page 80

ஈரானில் இருந்து உடன் வெளியேறுக: அமெரிக்காவின் உத்தரவால் பரபரப்பு!

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனே வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் அவசரமாக அறிவுறுத்தி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவும் நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அவற்றை ஒடுக்க அரசு எடுத்த நடவடிக்கையால் வன்முறை ஏற்பட்டது.

இதில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் விரைந்தன.

இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சு நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அவசரமாக அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானில் பதற்ற சூழல் அதிகரித்து வருகிறது.

அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்படுதல், போக்குவரத்து இடையூறுகள், தடுத்து வைக்கப்படும் அபாயங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க குடிமக்கள் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறது என மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் ஈரானில் விசாரணை, கைது மற்றும் தடுப்புக்காவல் அபாயத்திற்கு உள்ளாகக்கூடும். அங்கு அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து இணைய தடைகளையும் எதிர்கொள்ளலாம்
விமானங்கள் ரத்து மற்றும் இடையூறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஈரானில் இருந்து வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை போதுமானதாக வைத்து கொள்ள வேண்டும ” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் அரசமைப்புக்கு முரண் அல்ல!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, சாதாரண பெரும்பான்மையுடன் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதியுடன் அதற்குரிய வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த பின்னர், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதா சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

” பெருந்தோட்ட நிறுவனங்களின் விளையாட்டு ஆரம்பம்”

” சம்பள உயர்வு வருவதற்கு முன்னரே பெருந்தோட்டக் கம்பனிகள் விளையாட்டை ஆரம்பித்துள்ளன. இந்த விளையாட்டை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.” – தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.

ஊடக சந்திப்பின் மனோ தெரிவித்த கருத்துகள் – வீடியோ – லிங்கை க்ளீக் செய்யவும்

https://www.facebook.com/reel/1636290784034932

எம்.பி.பி. அரசுக்குள் எவ்வித பிளவும் இல்லை: பதவியைவிட கடமையே எமக்கு முக்கியம்!

“தேசிய க்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுக்கிடையில் எவ்வித பிளவும் இல்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில்கூட எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ளாத தரப்பினரே வதந்திகளைப் பரப்புகின்றனர்.”

இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தனது இந்திய விஜயத்துக்கு முன்னதாக அரசாங்க ஊடகத்தக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையில் முரண்பாடு உள்ளது என வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“நாம் சகோதரத்துவத்துடனேயே செயல்பட்டுவருகின்றோம். ஒருமித்த இலக்கை நோக்கியே எமது பயணம் உள்ளது. பதவி என்பதைவிட பொறுப்பு என்பதே எமக்கு முக்கியம்.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் இலக்கு ஒருமித்தாகவே உள்ளது.

பிரதமர் ஹரிணிக்கும் எனக்கும் இடையில்கூட மோதல் உள்ளது என கருத்து பரப்பினர். அவ்வாறு எதுவும் இல்லை. நாம் விவாதத்தில் ஈடுபட்டாலும் அது ஒருபோதும் மோதலாக மாறிதில்லை.

ஏனைய கட்சிகளைப்போல தனிநபர் செல்வாக்கு செலுத்தும் கட்சி அல்ல எமது கட்சி. நாம் என்ற சிந்தனை அடிப்படையிலேயே செயல்படுகின்றோம். எம்மிடையே கூட்டு பொறுப்பு உள்ளது” – என்றார்

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய உதவி: ஜனாதிபதி நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 1.9 பில்லியன் ரூபா!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் ஏற்கனவே குறித்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதில் 15,000 ரூபா திறைசேரியில் இருந்தும், 10,000 ரூபா ஜனாதிபதி நிதியத்தினாலும் வழங்கப்படும்.

அதன்படி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் குறித்த நிதி உதவியை விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

U-19 உலகக்கிண்ணம்: 6 ஆவது முறை வெற்றிவாகை சூடுமா இந்தியா?

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கைநேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.

ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் சந்திக்கவில்லை. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி 5 முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது.

இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.

இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. ஆனாலும் போட்டி உள்ளூரில் நடப்பதால் இந்தியா மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (06.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சம்பள உயர்வு உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட்டு பகிரங்கப்படுத்துங்கள்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள அதிகாரிப்புக்கு அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் செய்து கொண்ட புரிந்துனர்வு உடன்படிக்கையை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

“பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறிக்கொண்டு கொள்ளை லாபம் ஈட்டும் நிறுவனங்களாக காணப்படுகின்றன. சம்பள அதிகரிப்பு கோரிக்கை எழும் போதெல்லாம் அதற்கு பாதகமான பதிலையே தெரிவித்து வந்திருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது அரசாங்கம் கடுமையான நிற்பந்தத்தை கொடுத்து அடிப்படை சம்பளத்தில் 200 ரூபாய் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் அதற்கு பதிலாக 2042 இலிருந்து மேலும் 50 வருடங்களுக்கு பெருந்தோட்டங்களை அதே கம்பனிகளுக்கு குத்தகை நீடிப்பு வழங்குவதற்கு இரகசிய உடன்பாடு ஏற்பட்டி ருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இதன் உண்மைத்தன்மை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் 50 ஆண்டுகளுக்கு பெருந்தோட்ட சமூகம் பெருந்தோட்ட கம்பனிகளின் கொத்தடிமைகளாக இருக்க முடியாது. இதற்கு அரசாங்கத்தின் பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறோம்.

தற்போது தோட்டங்களில் வேலை செய்பவர்களில் இருபத்தைந்து வீதத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்களாக தொழில் புரிகின்றனர்.

மீதமுள்ள 75 வீதமானவர்கள் தற்காலிக தொழிலாளர்களாகவும், பறிக்கப்படும் கொழுந்திற்க்கு மட்டும் ஊதியம் பெறுபவர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களாகவும், ஓய்வு பெற்ற வயது முதிர்ந்த துண்டு கூலி அடிப்படையிலான தொழிலாளர்களாகவும் தோட்டங்களில் வேலை செய்கின்றனர்.

இதனால் உயர்த்தப்பட்ட சம்பளம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.

அதிகரிக்கப்பட்ட அரசாங்கத்தால் வழங்கப்படவிருக்கின்ற 200 ரூபாய் தோட்டத்தில் வேலைக்கு செல்கின்ற சகல தொழிலாளர்களுக்கும் கிடைக்குமா?

சம்பளம் அதிகரிப்பின் அனுகூலங்களை தற்காலிக , பறிக்கப்படும் கொழுந்தின் அளவிற்கு மட்டும் ஊதியம் பெறுகின்ற, மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்கின்ற தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏதாவது பொறிமுறை இருக்கிறதா?

பெருந்தோட்ட கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களை தவிர்ந்த தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் நிலைமை என்ன?

அல்லது தற்போது நிரந்தர தொழிலாளர்களாக இருக்கின்ற சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டும் இது வழங்கப்படுவதாக இருந்தால் சம்பளம் அதிகரிப்பு 75% தோட்டத் தொழிலாளர்களை புறக்கணிப்பதாக அமையும்.

அரசாங்கம் பெருந்தோட்ட கம்பெனிகளும் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறாயின் இந்த சம்பள அதிகரிப்பின் மூலம் ஏதாவது ஒரு தரப்பு பாதிக்கப்பட்டி ருந்தால் அவர்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி நியாயம் கோருவதற்கு எவ்வித வழிமுறைகள் இல்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு தொழில் சட்டமும், சம்பள நிர்ணய சபையும் மௌனிக்கப்பட்டிருக்கின்றன. இது தொழிலாளர் சமூகத்துக்கு சாதகமான ஒரு நிலை அல்ல. எனினும் தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாத அளவுக்கு தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில் இதய சுத்தியேடு செயல்பட்டி ருக்கிறது.

செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர் உடன்படிக்கையில் நாம் சுட்டிக் காட்டி இருக்கின்ற குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வேண்டுகிறோம். என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள் அனுஷ்டிப்பு: கைது செய்யுமாறு மொட்டு கட்சி வலியுறுத்து!

“இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும், சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கைது இடம்பெற வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று ஜனாதிபதி உட்பட நாட்டு மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகின்றது.

இவ்வாறு பெரும் சேவையாற்றிய படையினரை, டித்வா புயலுடன் மட்டும் மட்டுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியின்கீழ் முயற்சி எடுக்கப்படுகின்றது.

இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். இது நல்லது. ஆனால் வடக்கில் நேற்று (நேற்று முன்தினம்) இனவாதம் தூண்டப்பட்டது. சுதந்திர தினத்தில் அங்கு கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

எனவே, இனவாதத்துக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி அதனை செயலில் காட்ட வேண்டும். கைது செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் தேசிய தலைவர்: அவரின் பெயரை வைப்பது தவறு கிடையாது!

“மலையகத்தில் இருக்கின்ற நிறுவனங்களுக்கு தொண்டமானின் பெயரை வைக்ககூடாதென சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதனை என்னால் ஏற்க முடியாது. சௌமியமூர்த்தி தொண்டமான் என்பவர் இந்நாட்டின் அடையாளம். ஒரு தேசிய தலைவர், அதனால்தான் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ அப்படியான தேசிய தலைவரின் ஞாபகார்த்தமாக ஏதாவது செய்தால், அவரின் படத்தை வைக்க கூடாது, பெயரை வைக்ககூடாது என கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.

சௌமியமூர்த்தி தொண்டமானால் மலையக மக்களுக்கு சேவை செய்துள்ளார்.

அவரின் பெயரை வைப்பதில் தவறு இல்லை. ஊழல் நடந்தால் தட்டி கேளுங்கள். பெயர் வைப்பதை விமர்சிக்க வேண்டாம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

இது ஒரு மகத்தான நாள்: பொற்காலம் பிறக்கும்!

0
இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ள நிலையில், சர்வதேச அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

லெபனான்மீதான தாக்குதலை கைவிடவில்லை!

0
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போர்நிறுத்த முயற்சிக்கு அவர் தனது ஆதரவை...

“நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும்”

0
நாட்டில் எரிபொருள் விலையேற்றம் குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு நிலவுகின்ற கால கட்டத்தில் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் மத்தியில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து ஒத்துழைக்க வேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும்...