Home Blog Page 81

சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள் அனுஷ்டிப்பு: கைது செய்யுமாறு மொட்டு கட்சி வலியுறுத்து!

“இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும், சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கைது இடம்பெற வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று ஜனாதிபதி உட்பட நாட்டு மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகின்றது.

இவ்வாறு பெரும் சேவையாற்றிய படையினரை, டித்வா புயலுடன் மட்டும் மட்டுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியின்கீழ் முயற்சி எடுக்கப்படுகின்றது.

இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். இது நல்லது. ஆனால் வடக்கில் நேற்று (நேற்று முன்தினம்) இனவாதம் தூண்டப்பட்டது. சுதந்திர தினத்தில் அங்கு கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

எனவே, இனவாதத்துக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி அதனை செயலில் காட்ட வேண்டும். கைது செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் தேசிய தலைவர்: அவரின் பெயரை வைப்பது தவறு கிடையாது!

“மலையகத்தில் இருக்கின்ற நிறுவனங்களுக்கு தொண்டமானின் பெயரை வைக்ககூடாதென சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதனை என்னால் ஏற்க முடியாது. சௌமியமூர்த்தி தொண்டமான் என்பவர் இந்நாட்டின் அடையாளம். ஒரு தேசிய தலைவர், அதனால்தான் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ அப்படியான தேசிய தலைவரின் ஞாபகார்த்தமாக ஏதாவது செய்தால், அவரின் படத்தை வைக்க கூடாது, பெயரை வைக்ககூடாது என கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.

சௌமியமூர்த்தி தொண்டமானால் மலையக மக்களுக்கு சேவை செய்துள்ளார்.

அவரின் பெயரை வைப்பதில் தவறு இல்லை. ஊழல் நடந்தால் தட்டி கேளுங்கள். பெயர் வைப்பதை விமர்சிக்க வேண்டாம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுர நாளை கண்டி விஜயம்!

‘டித்வா’ சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை (06) கண்டியில் நடைபெறவுள்ளன.

அதன்படி, ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்விலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த கைத்தொழிற்துறையினர்களுக்கும், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

டித்வா சூறாவளியினால் தொழிற்சாலைகள் அல்லது இயந்திர உபகரணங்கள் சேதமடைந்தவர்கள், தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இழப்பீட்டுத் தொகையாக தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. சிறு, நடுத்தர அல்லது பாரிய அளவிலான கைத்தொழில்கள் என்ற வேறுபாடின்றி, பதிவு செய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்களுக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

அத்தோடு கண்டி மாவட்டத்தில் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபாயில், முதல் தவணையாக தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் இதன்போது வழங்கப்படும். தமக்குச் சொந்தமான காணியில் வீடு கட்டுபவர்கள் அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணியில் வீடு கட்டுபவர்கள் இதில் அடங்குவர்.

அத்துடன், சூறாவளியினால் வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கான காணி வழங்கல் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நாளை (06) பிற்பகல் நியாங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

பகுதியளவில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் விரைவான நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. அத்துடன், புதிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி இணைந்து கொள்வார்.

அத்தோடு, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் (A-009) அமைந்துள்ள மகைய்யாவ சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளையும் நாளை முற்பகல் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும், இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பால நிர்மாணப் பணிகளும் ஜனாதிபதி தலைமையில் நாளை(06) மீண்டும் தொடங்கி வைக்கப்படும்.

பா.ஜ.க. தமிழக தலைவர் – ஜீவன் சந்திப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றிருந்தது.

திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாராயண பெருமாள் கோயிலில் நாளை (06) நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் , ஜீவன் தொண்டமான் எம்.பியின்
அழைப்பை ஏற்று பூர்வீக இல்லத்திற்கு வருகை தந்திருந்தபோது இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, இருவருக்கும் இடையில் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுடனான இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமைந்ததுடன், வருகை தந்திருந்த அவர்களுக்கு ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெவித்துக்கொண்டார்.

அன்று ரூ.50 கூட வழங்கப்படவில்லை: இன்று அரச தரப்பில் ரூ.200 வழங்கப்படுகிறது: வரவேற்கின்றோம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பாராட்டுகின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன் MP தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா சம்பளம் வழங்குவதற்குகூட கடந்த கால அரசாங்கம் முடியாது எனக் கூறிவிட்டது.

ஆனால் தற்போது அரசாங்க தரப்பில் 200 ரூபா வழங்கப்படுகின்றது. கம்பனி தரப்பில் இருந்து 200 ரூபா வழங்கப்படுகின்றது. மொத்தம் தொழிலாளர்களுக்கு 400 ரூபா கிடைக்கப்பெறவுள்ளது.

சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்ககூடாது.” – எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

புதிய கணக்காய்வாளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமனம்!

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளராகப் பணியாற்றிய திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை இந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு பெப்ரவரி 03 ஆம் திகதி கூடிய அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

இந்நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண், திருமதி ஜயரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றிய சூலந்த விக்ரமரத்ன ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு,தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிக் கணக்காய்வாளரான திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி ஜயரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலை (சிறப்பு) பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றுள்ளதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் அரச நிதி கணக்காளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

பெலவத்தையிலிருந்து அரசாங்கத்தை இயக்குவது டில்வின் சில்வாவா?

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் பதவிப் போட்டி எதுவும் இல்லை. கூட்டு பொறுப்புடனேயே செயல்பட்டுவருகின்றோம். நாளை பதவி விலகச்சொன்னால்கூட விலகிச்செல்லக்கூடிய தோழர்களே உள்ளனர். புதவியைவிட கடமைதான் முக்கியம்.”

இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாத தரப்பினரே, பிளவு பற்றி கதைகளைப் பரப்பி வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பெலவத்தையில் (ஜே.வி.பி. தலைமையகம்) நீங்கள் இயக்குவதாகக் கூறப்படுகின்றது.

நீங்கள்தான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி என்ற விமர்சனமும் எதிரணியால் முன்வைக்கப்படுகின்றதே…” என டில்வின் சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“நான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி அல்லன். நான் ஜே.வி.பியின் செயலாளர் மட்டுமே.

நான் எவருக்கும் அழுத்தம் பிரயோகிப்பது கிடையாது. அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது இல்லை.

ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் தலைமையகம் பெலவத்தையில்தான் உள்ளது.

ஆட்சி அமைப்பதற்கு முன்னரும் நாம் அங்கிருந்துதான் முடிவுகளை எடுப்போம். தற்போதும் அங்கிருந்து கலந்துரையாடுவோம்.

அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் உரிய இடத்தில் எடுக்கப்படும். எமது கட்சி தலைமையகத்தில் கருத்தாடல் இடம்பெறும்.

பல யோசனைகள் வரும், அது பற்றி ஆராயப்பட்டு பெரும்பாலானோரின் தேர்வு ஏற்கப்படும்.

எனவே, பெலவத்தையில் கலந்துரையாடல் இடம்பெறும். ஆனால் பெலவத்தையில் இருந்து கொண்டு ஒருவர் இயக்குகின்றார் எனக் கூறப்படுவது தவறு.

ஏனைய கட்சிகளைப்போல தனிநபர் செல்வாக்கு செலுத்தும் கட்சி அல்ல எமது கட்சி. நாம் என்ற சிந்தனை அடிப்படையிலேயே செயல்படுகின்றோம். எம்மிடையே கூட்டு பொறுப்பு உள்ளது.

தனிநபர் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளுக்கு எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினம்.” – என்றார் டில்வின் சில்வா.

https://www.youtube.com/watch?v=hxFjnM_Ro1Q

ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை!

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு ட்ரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு துப்பாக்கியுடன் ரியான் ரூத் (59) புதர்களில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் மறைந்திருந்ததாகவும், பின்னர் உளவுத்துறையினரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது தனது தரப்பிலான வழக்கறிஞராக தானே செயல்பட்ட ரௌத், ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட நீதிபதியிடம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரினார்.

ஆனால், ரூத்தின் குற்றங்கள் “அமெரிக்க ஜனநாயகத்தை சீர்குலைப்பதை” நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், ஆயுள் தண்டனையை பரிந்துரைத்திருந்தனர்.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி அய்லி கேனன், “ஒரு மனித உயிரைப் பறிப்பதற்காக நீங்கள் திட்டமிட்டு, ஒரு சதியில் ஈடுபட்டது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது” என்று தனது தீர்ப்பில் கூறினார்.

இந்தச் சம்பவம் செப்டம்பர் 15, 2024 அன்று புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள ட்ரம்ப் சர்வதேச கோல்ஃப் கிளப்பில் நடந்தது. இதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த ஒரு பேரணியில் ட்ரம்பின் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில், மர்ம நபரின் துப்பாக்கி குண்டு ட்ரம்ப்பின் காதை உரசிச் சென்றது.

சம்பவம் நடந்த நாளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ரூத் புளோரிடாவுக்கு வந்து, ஒரு டிரக் நிறுத்தத்தில் தங்கியிருந்து, ட்ரம்பின் நடமாட்டம் மற்றும் பயண அட்டவணை குறித்த தகவல்களை சேகரிக்க முயன்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ட்ரம்ப்பைக் கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரூத் தெரிவித்தார். மேலும், சிறையில் இருக்கும்போது உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியா பயணம்!

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டது.

இந்த விஜயத்தில் புதுடில்லிக்கு மேலதிகமாக குஜராத் மற்றும் கேரளா மாநிலத்திற்கும் தோழர்கள் பயணிக்கவுள்ளதுடன், அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். தவிர, இந்தியாவின் விவசாய, தொழில் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உரித்தான மத்தியநிலையத்தையும் பார்வையிடவுள்ளனர்.

இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகிய தோழர் கலந்துகொண்டுள்ளனர்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு”

0
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போர்ச் சூழலால் மத்திய...

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

0
  "Rebuilding Sri Lanka" ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில், "Rebuilding Sri Lanka" திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும்...

இது ஒரு மகத்தான நாள்: பொற்காலம் பிறக்கும்!

0
இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ள நிலையில், சர்வதேச அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...