Home Blog Page 82

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வழங்குவதில் அமெரிக்கா பின்வாங்கல்?

AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவிற்கு வழங்காமல் அமெரிக்கா தன் வசம் வைத்திருக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தைவான் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதரவு உறுதியில்லாததால், சீனாவை எதிர்கொள்ள தமது பாதுகாப்பு வியூகத்தை அமெரிக்கா மாற்றக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.

AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை (SSN) விற்காமல் இருக்க அமெரிக்க பெண்டகன் முடிவு எடுக்கக்கூடும் என்ற விருப்பம், அமெரிக்க அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் ஆய்வு அலுவலகம் (Congressional Research Office) வெளியிட்ட அறிக்கையில், ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைக்கு (ADF) வழங்க திட்டமிடப்பட்ட 3 முதல் 5 வரை Virginia-வகை அணு நீர்மூழ்கிக் கப்பல்கள், அமெரிக்க கட்டுப்பாட்டிலேயே இருந்து, ஆஸ்திரேலிய தளங்களில் இருந்து இயக்கப்படலாம் என்ற சாத்தியம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தைவான் தொடர்பாக அமெரிக்கா–சீனா இடையே போர் வெடித்தால், அந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் முழுக் கட்டுப்பாடு அமெரிக்காவிடமே இருக்க வேண்டியது அவசியம் என அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை விற்பது, அமெரிக்கா–சீனா மோதல் நேரத்தில் அமெரிக்காவின் தடுப்புத் திறனை வலுப்படுத்தாமல், பலவீனப்படுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய திட்டத்தின் படி, 2032க்குள் அமெரிக்கா கட்டிய Virginia-வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்படையில் சேர வேண்டும். அதன் பின்னர், புதிய வடிவமைப்பில் SSN-AUKUS கப்பல்கள் 8 வழங்கப்படவுள்ளன.

அந்த கப்பல்கள் வழங்கப்படாவிட்டால், அதற்குப் பதிலாக நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், தன்னிச்சை தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கான மேம்பட்ட ஆயுதங்களில் முதலீடு செய்யலாம் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு AUKUS ஒப்பந்தம் மீதான சந்தேகங்கள் எழுந்தாலும், பின்னர் அவர் பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்த போது, “முழு வேகத்தில் முன்னேறுகிறோம்” என ஒப்பந்தத்திற்கு உறுதியான ஆதரவை தெரிவித்திருந்தார்.

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதலில் ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவித்தது படக்குழு. அவரைத் தொடர்ந்து சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தனுஷ் – சாய் பல்லவி ஜோடி ‘மாரி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இருவரும் இணைந்து நடனமாடிய ‘ரெளடி பேபி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் நாயகியும் சாய் பல்லவி தான். இருவருக்குமே விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்ததில் இருந்து நல்ல பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரியவுள்ளார். இதில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (05.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஈரான், அமெரிக்காவுக்கிடையில் ஓமானில் சந்திப்பு!

போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு நேரடி சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை ஓமானில் நடைபெறவுள்ளது.

பேசப்படும் விடயங்கள் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் என்பன தொடர்பில் எழுந்த சர்ச்சையால் இரு தரப்பு சந்திப்பு நடக்காது என ஊகம் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே சந்திப்பு தற்போது உறுதியாகியுள்ளது.

சந்திப்புக்குரிய ஏற்பாட்டை செய்த ஓமானுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி Abbas Araghchi நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சர்வதேச உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கை நோக்கி நகர்ந்தன.

மறுபுறத்தில் தமது நாடுமீது வைக்கப்பட்டால் அது மத்திய கிழக்கு போராக மாறும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஈரானின் ஏற்பட்டுள்ள போராட்டம் அந்நாட்டு அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாளை இரு தரப்பு சந்திப்பு இடம்பெறவுள்ளது. இரு தரப்பிலும் உயர் மட்ட பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

 

 

என்.பி.பி. அரசை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது!

“159 ஆசனங்களை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது.” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“ மாங்காய் மரத்துக்கு கல் அடிப்பதுபோல ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது.

ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே அரசாங்கம் முற்படும். மறுபுறத்தில் எதிரணிகள் தமது கருத்துகளை முன்வைக்கும்.

எனவே, ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கதைக்கப்பட்டாலும் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வி மறுசீரமைப்பு எனது ஆட்சிகாலத்தில்தான் ஆரம்பமானது. நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம். கல்வியில் அரசியலை திணிக்க கூடாது. கல்வி மறுசீரமைப்பென்பது பொறுப்புடன் செய்ய வேண்டிய விடயமாகும்.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்!

இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் எனத் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்று அவர்களது போராட்டப் பந்தலில் முன்னெடுத்த ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“1948 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கும் ஒரு நீண்ட, இருண்ட பாதையின் தொடக்கமாக மாறியது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் சட்ட நிபுணர்கள் அல்லர். நாங்கள் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.

அவர்களை வளர்த்தவர்கள். அவர்களை இழந்தவர்கள். வவுனியா நகரில், இந்த வன்னிப் பந்தலில் 3 ஆயிரத்து 271 நாட்களாக நாங்கள் அமர்ந்திருக்கின்றோம். மழையிலும், வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை. 1948 இல், இலங்கை சுதந்திரம் பெற்றது.

ஆனால் அந்தச் சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களைக்  காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை.

இந்த அநீதியின் வேர்கள், சோல்பரி கமிஷன் உருவாக்கிய அரசியல் அமைப்பிலேயே உள்ளன. இங்கிலாந்து இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறி, பெரும்பான்மை ஆட்சியை ஜனநாயகமாக்கி, தமிழர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுச் சென்றது.

காலனித்துவத்திற்கு முன்பு, தமிழர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் அதிகாரம் இருந்தது. தங்கள் சொந்த நிலமும் நிர்வாகமும் இருந்தது. இந்த உண்மை அரசமைப்பில் சொல்லப்படவில்லை. இது சொல்லப்படாத உண்மை.

பின்னர் எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஒரு சட்டபூர்வ அநீதியாக மாறியது. அந்தத் தவறுகளின் விலையையே இன்று நாங்கள் இந்தப் பந்தலில் எங்கள் கண்ணீரோடு செலுத்துகின்றோம்.

எங்கள் கேள்வி எளிமையானது. எங்கள் குழந்தைகள் எங்கே? அவர்கள் எங்கே? யார் பொறுப்பு? எப்போது நீதி? கரி நாள் எங்களுக்கு ஒரு சடங்கு நாள் அல்ல. அது ஒரு நினைவூட்டல்.  சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரிநாள்.” – என்றனர்.

கடாபியின் மகன் சுட்டுக்கொலை!

 

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி, வடமேற்கு லிபியாவின் ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டதாக அவரின் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

எண்ணெய் வளமிக்க வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் மும்மெர் கடாபி.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
அமெரிக்க தரப்பு அவரது கதையை முடித்து வைத்தது.

இவரது மறைவுக்குப் பிறகு, கடாபியின் அரசியல் வாரிசாக மகன் சைப் அல் இஸ்லாம் பார்க்கப்பட்டார். அப்போது கைது செய்யப்பட்ட சைப் பின்னர் 2017 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சைஃப் அல் இஸ்லாமை வடமேற்கு லிபியாவில் உள்ள ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தப்பியோடியுள்ளது.

இந்தச் சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில் இந்தக் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை.

கடாபியின் மகனான சைஃப், லிபியாவில் நடைபெறும் பேரழிவு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரும் பங்காற்றினார்.

2011 ஆம் ஆண்டு லிபியாவில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு நீண்ட கால சிறைவாசத்திலிருந்து மீண்ட அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருந்ததாகவும், அதனால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான ஒத்துழைப்பு தொடரும்: அமெரிக்கா உறுதி!

அமெரிக்காவும் இலங்கையும் சுதந்திரமான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ; 78 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ இலங்கை மக்கள் தங்கள் தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது ஒரு பெரிய மரியாதையாகும்.
அமெரிக்காவும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், எங்கள் கூட்டாண்மை வலுவடைந்துள்ளது, இது அண்மையில் பேரழிவை ஏற்படுத்திய டிட்வா சூறாவளிக்குப் பின்னர், சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக உயிர்காக்கும் உதவி மற்றும் அமெரிக்க நிபுணத்துவம் மற்றும் வளங்களை வழங்கியதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது.

வரும் ஆண்டில், எங்கள் பொருளாதார உறவுகளை வளர்க்கவும், பிராந்திய உறுதித்தன்மையை ஊக்குவிக்கவும், எங்கள் மக்களின் அபிலாசைகளை ஆதரிக்கவும் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்” என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ரூபியோ தெரிவித்துள்ளார்.

யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் குறித்து போலியான தகவல் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,

“ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சால் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

அது தொடர்பில் அடிப்படையற்ற போலியான தகவல்களே சமூகவலைத்தளங்களில் பரப்பட்டுவருகின்றன.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவ்வாறு போலியான தகவல்களை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது.” -என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: மனோ

அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார்.

விசாரணைகள் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

“ரணில், நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோரை விசாரியுங்கள். ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பியுங்கள். வழக்குகளைத் தாக்கல் செய்து தீர்ப்புகளைப் பெறுங்கள். சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துங்கள்.

ஆனால் சட்டத்தின் ஆட்சியை நியாயமாகவும் வெளிப்படையாகவும் அமுல்படுத்துவது முக்கியம்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மீது பல முறைப்பாடுகள் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக உள்ளன, அவை தாமதமின்றி விசாரிக்கப்பட வேண்டும்.

நூற்றுக்கணக்கான கோடி இழப்புகளை ஏற்படுத்தி, மின் உற்பத்தி நிலையங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படும் தரமற்ற நிலக்கரியை கப்பல்களில் இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.

ஜேவிபி எதிர்க்கட்சியில் இருந்தபோது எதிர்த்த கேள்விப்பத்திர செயல்முறைக்கு அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.

அதேவேளை, சபாநாயகரின் பல வீடுகள், வாகனங்கள், கொடுப்பனவுகள் மற்றும் நெறிமுறை நடத்தை தொடர்பாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

மற்றவர்களை மட்டும் குற்றம் சாட்டி ஆட்சி செய்ய முடியாது.

உங்கள் சொந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும். நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும். பொறுப்புக்கூறலை நிலைநிறுத்தவும்,” என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு”

0
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போர்ச் சூழலால் மத்திய...

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

0
  "Rebuilding Sri Lanka" ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில், "Rebuilding Sri Lanka" திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும்...

இது ஒரு மகத்தான நாள்: பொற்காலம் பிறக்கும்!

0
இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ள நிலையில், சர்வதேச அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...