Home Blog Page 83

மரக்கறி விலைப்பட்டியல் (04.02.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (04.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

இனவாதம், அடிப்படைவாதம் தலைதூக்க இடமளியோம்: ஜனாதிபதி திட்டவட்டம்!

“பிளவுபட்டு நிற்பதால் பலத்தின் வலிமை தெரியாது. எனவே, ஒன்றுபடுவோம். அதன்மூலம் மனிதவளம் மேம்படும்.

அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்பன அழிவையே தரும். அவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. தேசிய ஒற்றுமை கட்டியெழுப்படும்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றுவருகின்றது.

சுதந்திர தின உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

“ இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் அடையாளம், கலாசாரம் உள்ளிட்ட உரிமைகள் ஏற்கப்பட வேண்டும்.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

……………

ஜனாதிபதியின் முழுமையான சுதந்திர தின உரை

78 ஆவது சுதந்திர தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம். 133 வருட கால மிகவும் குரூரமான நெருக்கடி நிறைந்த கொள்ளைக் கூட்டத்தின் காலனித்துவ ஆட்சியின் பின்னர் 1948 இல் சுதந்திரம் கிடைத்த வருடமாகும். அதே போன்று பல நூற்றாண்டுகள் காலனித்துவத்திற்கு எதிராக எமது மூதாதையினர் தமது இரத்தம் கண்ணீர் வியர்வையை இந்த தாய்நாட்டிற்காக அர்ப்பணித்தார்கள். அன்று எமது மூதைதையினர் திடஉறுதியுடனான நம்பிக்கையுடனான போராட்டத்தின் பலனாக எமக்கே தனித்துவமான இறைமையின் உரிமை கிடைத்தது.

1948 என்பது பல்வேறுபட்ட அர்ப்பணிப்புகள் செய்த எமது படையினரின் மற்றும் மூதாதையினரின் வெற்றியின் மற்றும் வீரத்தின் அடையாளமான வருடமாகும். குறிப்பாக நாம் வாழ்வில் பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுப்பதை அனைவரும் அறிவோம்.பலர் தங்களுக்காக போராடுகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அது அரிதான விடயமன்றி அது பொதுவான விடயமாகும். ஆனால் யாராவது தாய்நாட்டுக்காக அதே போன்று எதிர்கால சந்ததிக்காக தமது உயிரை அர்ப்பணித்து போராடுவதாக இருந்தால் அவர்கள் உண்மையில் வீரர்களாக மாறுவதை தடுக்க முடியாது. அவர்கள் மிகவும் உயர்வான பணியில் ஈடுபடுகின்றனர். நாம் இன்று கால்பதித்துள்ள இந்த பூமி தாய்நாட்டிற்காக போராடிய எமது மக்களின் எதிர்காலம் மற்றும் சுபீட்சத்திற்காக போராடிய எமது மூதாதையினர், எமது சகோதர சகோதரிகளின் இரத்தம்,கண்ணீர் மற்றும் வியர்வையினால் இந்த பூமி ஈரமாகியுள்ளது. அவர்கள் எமது இதயங்களில் வீரத்தின் உயர்ந்த இடத்தில் குடிகொண்டுள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே இன்றைய தினத்தில் குறிப்பாக எமது தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் மக்களின் உயர்ந்த சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களுக்கு எமது மரியாதையையும் கௌரவத்தையும் அளிக்க வேண்டும்.நாம் சுதந்திரத்திற்குப் பின்னர் 78 வருடங்கள் பயணித்துள்ளோம். ஆனால் எமது சுதந்திரத்தின் மிக முக்கியமான பணி சுதந்திரம் முழுமையடைவது நாம் எந்தளவு பொருளாதார ரீதியில் எந்தளவு சுதந்திரம் பெறுகிறோம் என்ற காரணியின் அடிப்படையிலே என நான் கருதுகிறேன்.
பூரணமான சுதந்திரம் தொடர்பான போராட்டம் இன்னும் இருப்பதாக நான் கருதுகிறேன். அந்தப் போராட்டம் எமக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

குறிப்பாக இவ்வருட சுதந்திர தினத்தின் தொனிப் பொருள் ‘இலங்கையை கட்டியெழுப்புவோம் ‘ என்பதாகும். நாம் இலங்கையின் சுயாதீனத்தன்மை, இறைமை,எமது சுதந்திரம் ஆகிய மும்மூர்த்தியின் மேல் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.

அதனை மீளக் கட்டியெழுப்புகையில் எமது தாத்பரியம் என்னவாக இருக்க வேண்டும். நாம் மிகவும் உயர்ந்த வரலாற்றைக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது மூதாதையினர் அந்தக் காலத்திற்கு உகந்த வகையில் அந்தக் காலப்பகுதியின் இருப்பிற்கு ஏற்றவாறு மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருந்ததை எமது வரலாற்று ரீதியான தகவல்கள் எமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. நாம் பெருமை மிக்க வரலாற்றை கொண்டுள்ள தேசமாகும்.

அதேபோன்று அன்மைக்கால வரலாற்றில் நாம் ஒதுக்கவேண்டிய பல விடயங்கள் உள்ளதோடு நாம் உள்வாங்கவேண்டிய பெருமளவான விடயங்களும் உள்ளன. அதனால் இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதை தாய்நாட்டுடனான பிரிக்கமுடியாத தொடர்புகளாகும்.எமது தாய்நாட்டை கட்டியெழுப்புகையில் வரலாற்றினால் வழங்கியுள்ள முக்கிய தாத்பரியத்தை இந்த பூமியில் மீள ஸ்தாபிப்பதற்கான பாதையே நாம் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பாதையாகத் தெரிவு செய்யப்படும். அது வெறுமனே தாய்நாட்டின் வேர்களை அழிக்கும் தேசத்தின் சாரத்தை ஒழிக்கும் பொருளாதார மார்க்கமல்ல. எமது தாய்நாட்டினதும் எமது தேசத்தினதும் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் நவீன இலங்கையொன்றை கட்டியெழுப்பும் பாதைக்கு நாம் பிரவேசிக்க வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னரான 78 வருடங்களில் வெற்றி தோல்வி இரண்டும் உள்ளது. நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. நாம் ஒருபோதும் தீயவற்றை ஒதுக்க தயங்க மாட்டோம். அதேபோன்று ஒருபோதும் நல்லவற்றை உள்வாங்குவதற்கு அஞ்சப் போவதில்லை. அதனால் கடந்த கால செழிப்பான விடயங்களின் அடிப்படையில் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்கும் உங்களுக்கும் இருப்பதாக நம்புகிறேன்.

நாம் எவ்வாறு கட்டியெழுப்பப்போகிறோம்? முதலில் நாம் எம்மிடமுள்ள சாத்தியங்கள்,திறமைகள்,பலங்களை வரிசைப்படுத்தில் எம்வசமுள்ள பிரதான பலம் எதுவாக இருக்கும்?நாம் பெரும் சமுத்திர வலயத்திற்கு உரித்துடையவர்கள் என்று கூறலாம். சிறந்த காலநிலை வலயத்தில் அமைந்துள்ளோம் என்று கூறலாம். இயற்கை வளங்களினால் போசிக்கப்ட்டுள்ளதாக எமக்கு கூற முடியும். ஆனால் இவை அனைத்தையும் விட மனித வளமே உயர்வான வளம் என நாம் நம்புகிறோம். எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான திடஉறுதிக்கு வருவோமானால் எமது மனிதவளம் உலகில் உள்ள எந்தவொரு தேசத்துடனும் போட்டிபோடக் கூடிய சகல வகையிலும் பூரணத்துவமான மனித வளமாக மாற்றியமைக்க வேண்டும். அறியாமைக்குப் பதிலாக அறிவையும் பழைய பாதகங்களுக்கு பதிலாக முன்னேற்றத்தையும் பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்ட நவீன மனித வளத்தை உருவாக்க வேண்டும்.

குறிப்பாக அதில் கலை,இலக்கியம்.வரலாறு அதேபோன்று புதிய தொழில்நுட்பம் மற்றும் கல்வி என்பன இந்த மனிதவளத்தை முன்னேற்றுவதில் முக்கிய பங்காற்றுவதை நாம் அனைவரும் அறிவோம். அவ்வாறானால் எமது நாட்டில் முன்னேற்றகரமான மனித வளத்தை எதனால் கட்டியெழுப்பப்போகிறோம். அறிவு, கருணை, நவீன தொழில்நுட்பத்தை இணைத்துக் கொள்வதன் ஊடாக மேன்மையான மனித வளத்தை உருவாக்க வேண்டும்.

அதனை உருவாக்குவதற்கு எமது கல்வித்துறையில் பாரிய பரிமாற்ற யுகத்தை ஆரம்பிக்க வேண்டும். நாம் அதற்குத் தயாராக இருக்கிறோம். நவீன மனிதனை உருவாக்கும் முயற்சிக்கு பழைய பாதகங்களினால் எந்தளவு இடையூறு செய்தாலும் அவை அனைத்திற்கும் எதிராக நவீன அறிவு, நவீன தொழில்நுட்பம். நவீன மனிதனை உருவாக்கத் தேவையான பரிமாற்றத்திற்கான பணியை மேற்கொள்ள நாம் தயார்.அதற்காக எமது நாட்டு பொதுமக்களின் ஒத்துழைப்புள்ளது என நம்புகிறோம்.

அதே போன்று அடுத்த முக்கிய விடயம் மனித வளம் எமக்கு முக்கிய பலமாக உள்ளது என்ற உண்மையான விடயமாகும். ஆனால் அந்தப் பலம் நாம் பிரிந்திருப்பதிலா அல்லது இணைந்திருப்பதிலா தங்கியுள்ளது? எம்மிடமுள்ள பிரதான பலமான மனித வளம் எமது ஒற்றுமையில் மாத்திரமே தங்கியுள்ளது. நாம் பிரிந்தால் எமது பலம் பலவீனமடையும். நாம் பிரிந்தால் எமது பலம் பலவீனமடையும். நாம் மற்றவர் மீது குரோதம் மற்றும் சந்தேகம் மற்றும் மோதல் ஏற்பட்டால் எமது பிரதான பலம் பலவீனமடையும்.

இலங்கையென்பது பல்வேறு மதத்தவர்கள் வாழும் நாடு. தமக்கே தனித்துவமான கலாசாரங்களை கொண்ட மக்கள் உள்ளனர். அதே போன்று பிரதானமாக இருமொழிகளை தமது தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். நம்பிக்கைகள், கலாசாரங்கள், வழிபாடுகளில் வேறுபாடு உள்ளன. நாம் எங்கு நோக்கிச் செல்ல வேண்டும்? இந்த மாற்றங்களை மோதலுக்காக பயன்படுத்தலாம்.இந்த மாற்றங்களை மற்றவர்களுக்கு எதிரான ஆயுதமாக உயர்த்திப் பிடிக்க முடியும். ஆனால் அவை எமது பலத்தை பலவீனப்படுத்திவிடும்.

எமது அபிலாசை எது. இந்த வேறுபாடுகளை மதித்து ஒவ்வொரு இனக்குழுக்களின் தனித்துவத்தை அங்கீகரித்து அதேவேளை இலங்கையராக
சிந்திக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக யுகம் எமக்கு அவசியம்.எமது அகராதியில் இருக்கும் மிகவும் அசிங்கமான இரு வசனங்கள் எவை?

இனவாதம் மற்றும் மதவாதம் தான் அவை.

அதனால் இனவாதம் மற்றும் மதவாதத்தினால் எம்வசமுள்ள பலங்களை நாம் சுயமாக அழிப்பதும் பலவீனப்படுத்துவதும் தான் நடக்கிறது என நம்புகிறோம். அதனால் எமது நாட்டில் எந்த வித பிரிவினைக்கு, இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். எமது நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான பிரதான பலத்தை கட்டியெழுப்புவோம் என்பதை எமது நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறோம்.

அடுத்த பிரதான விடயம் என்ன? எமக்கு பலமான மனித வளத்தை கட்டியெழுப்புவதைப் போன்றே மனித வளத்தின் ஒற்றுமையை கட்டியெழுப்பிய பின்னர் அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சியை சமமாகவும் நியாயமாகவும் நிலைநாட்ட வேண்டும். நாம் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். நவீன இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும். அனைவரும் சட்டமெனும் கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும். எமது நாட்டு பிரஜைகள் மத்தியில் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலான நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு நியாயமான நபரும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு அச்சமடைய மாட்டார். அனைத்து நியாயமான நபரும் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்ப்பதாக நாம் அறிவோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஓரங்கட்டுகின்றனர். வீழ்த்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படுவதற்கு அஞ்சுகின்றனர் என்பதை நாம் அறிவோம். எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பான இலங்கையை கட்டியெழுப்புகையில் ‘ இலங்கையை கட்டியெழுப்புவோம் ‘ என்ற தொனிப்பொருளுக்கு சட்டத்தின் ஆட்சியை முறையாக உறுதிப்படுத்துவதிலே உயிரோட்டம் ஏற்படுகிறது.

அதேபோன்று எமது நாட்டை கட்டியெழுப்புகையில் எமக்காக மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கு உகந்த தேசத்தை உருவாக்க வேண்டும். அண்மைக் காலத்தில் முகங்கொடுத்த டித்வா சூறாவளியை பாருங்கள். பல நூறு மண்சரிவுகள் பதியப்பட்டன. மலைகள் சரிந்தன. ஆற்றங்கரைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. எமது நாட்டின் மத்திய மலைநாட்டில் இந்த நிலை முக்கியமாக இடம்பெற்றன. மத்திய மலைநாட்டில் இருந்து ஊற்றெருக்கும் ஆறுகள் தான் இந்த தாய்நாட்டுக்கு உயிரோட்டத்தை கொண்டுவருகிறது.

மத்திய மலைநாட்டில் பொழியும் கடும் மழைதான் தாய்நாட்டுக்கு சுவீட்சத்தை கொண்டு வருகிறது. ஆனால் மத்திய மலைநாட்டுக்கு ஏற்பட்ட அழிவின் பாரதூரத்தை எமது வாழ்நாளில் அனுபவித்தோம். எம்மை கட்டியெழுப்வுதற்கான பாதை எந்தத் திசையாக இருக்க வேண்டும்.அனைத்து இயற்கை வளங்கள், அனைத்து சுற்றுச் சூழல் கட்டமைப்புகள், உயிரினங்களை முழுமையாக அழித்தும் அச்சுறுத்தியும் கட்டியெழுப்பப்படும் நாட்டினால் என்ன பயன்? சுற்றுச் சூழலை முறையாக பலப்படுத்துகின்ற நாம் பிறக்கும் போது இருந்த மரம்மட்டைகள், விலங்குகள், இயற்கை சூழலை அதே போன்றோ அதனை விட அதிகமாகவோ பாதுகாப்பதே ‘இலங்கையை கட்டியெழுப்புவோம் ‘ யின் பிரதான பணி என நாம் கருதுகிறோம். அதனால் சுற்றுச்சூழலை முழுமையாக நாசப்படுத்தும் அபிவிருத்திச் திசையை நாம் எதிர்பார்க்கவில்லை. அதன் பயங்கரமான பிரதிபலன்களுக்கு அண்மைக்காலத்தில் முகங்கொடுத்த தேசம் என்ற வகையில் அது தொடர்பில் நாம் அதிகளவில் சிந்திக்க வேண்டும்.

அடுத்து விசேடமாக நாம் நாட்டை கட்டியெழுப்புகையில் எமக்கு மிகவும் பலமான சர்வதேச ஒத்துழைப்புகள் அசியம் என நம்புகிறோம். உலக சந்தை தொடர்பான போட்டியில் பிளவு காணப்படுகிறது. உலகம் ஒவ்வொரு நாடுகளின் பலம் தமது கோணங்களை ஆதிக்கமாக திணிப்பது தொடர்பான மோதல் காணப்படுகிறது. தொடர்ச்சியாக மோதல்களை உருவாக்கும் உலமாக இருக்கிறது. நாம் எந்தப் பக்கத்தை தெரிவு செய்ய வேண்டும்? நாம் எமது தாய்நாட்டிற்கு வெற்றிகளை கொண்டு வரும் எமது தாய்நாட்டின் பாதுகாப்பை அதிகமாக உறுதிப்படுத்துகின்ற நாட்டு மக்களின் வாழ்வை உயரத்திற்கு கொண்டு செல்கின்ற புதிய கோணத்திலான உறவுகளை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.

எமது நாட்டை மீண்டும் சர்வதேசத்தில் மிகவும் உயர்ந்த மற்றும் கௌரவமான தேசமாக மாற்றுவதே நாம் செல்லும் இந்தப் பாதையில் மிகவும் முக்கிய காரணியாகும். இந்தத் தூண்களின் மீது தான் எமது நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.

சட்டம் இல்லாத, ஒற்றுமையில்லாத, சிறந்த சர்வதேச உறவுகள் இல்லாத ,சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்ட , பாதகமான சமூகம் உள்ள இடத்தில் ‘கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளை சாத்தியமாக்க முடியாது. எனவே எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு அவசியமான தூண்களையும் அடித்தளங்களையும் உருவாக்கும் பணியை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
அந்தத் தூண்களின் மீது பலமான, அசையாத பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.எமக்கு ஓரளவு மகிழ்ச்சியம் பெருமையும் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு பொருளாதார குறிகாட்டிகளில் பொருளாதாரத்தின் சாதக பாதங்களை மதிப்பிடும் பொருளாதாரத்தின் ஸ்தீரத்தன்மையை மதிப்பிடும் பெரும்பாலான முக்கிய குறிகாட்டிகள் அண்மைக்காலத்தில் அதிக முன்னேற்றத்துடனான பொருளாதார மட்டங்களாக உருவாகியுள்ளன.

1977 இன் பின்னர் மிகக் குறைந்த துண்டுவிழும் தொகை 2025 இல் பதிவானது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வரலாற்றிலேயே இலங்கை வரலாற்றில் நடைமுறைக்கணக்கில் பதிவான அதிகூடிய உபரி 2025 ஆகும். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றிலேயே அதிகூடிய வருமானத்தை ஈட்டிய ஆண்டு 2025 ஆகும். வங்கி வட்டி விகிதங்களை நீண்டகாலமாக ஒற்றை இலக்கத்தில் பேணி வருகின்ற வருடம் 2025 ஆகும். பொருளாதாரக் காரணிகளில் மிக வெற்றிகரமானதொரு ஸ்திரத்தன்மை தற்போது காணப்படுகின்றது.

ஆயினும், ஒரு பொருளாதாரம் என்பது சாதகமான தரவுகளில் மட்டும் தங்கியிருப்பதில்லை. அது முக்கியமானது தான். ஆனால் அதில் முக்கிய செயற்பாடு என்னவாக இருக்கும்? நாம் பொருளாதார ரீதியாக நாம் அடையும் வெற்றிகள் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயராதவரை, மக்களின் வாழ்க்கை சுலபமாக்கப்படாத வரை அல்லது மக்களுக்கு மன நிம்மதியுடன் கூடிய வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க பொருளாதாரக் காரணிகளால் முடியாவிட்டால், அது வெறும் புள்ளிவிவரத் தரவுகளில் மட்டும் நீச்சலடிக்கும் ஒரு பொருளாதாரமாகவே அமையும்.

எனவே, பொருளாதாரத்தின் உச்ச மட்டத்தில் நாம் ஈட்டும் ஆற்றல்களையும் வெற்றிகளையும் கிராமத்திலுள்ள கடைசி பிரஜையின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதே பொருளாதாரத்தின் பிரதானமான மற்றும் வெற்றிகரமான திருப்புமுனையாகும். அந்த வகையில், மீண்டும் கட்டியெழுப்பப்படும் இலங்கையின் நோக்கம் , பொருளாதாரத்தின் நன்மைகள் சமூகத்தின் அடிமட்ட மக்கள் வரை சென்றடையும் ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதாகும். அதனை செய்ய வேண்டும்.

அதேபோன்று, சுதந்திரம் என்பது முழுமையான சுதந்திரமாக மாறுவது நாம் பொருளாதார ரீதியாக எந்தளவு பலமாக இருக்கிறோம் என்கின்ற காரணியிலேயே தங்கியுள்ளது. பொருளாதாரப் பங்களிப்பானது இரண்டு விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒருபுறம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், மறுபுறம் நமது நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தின் பலத்தை உறுதிப்படுத்துவதற்கும் அது அவசியமாகின்றது. அப்படியாயின் நாம் என்ன செய்ய வேண்டும். அதற்கேற்ற புதிய பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக ஏற்கெனவே எமது கைத்தொழிற்துறையினர்கள், தொழில்முயற்சியாளர்கள், அரச சேவை ,விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுடன் நாம் பரந்தளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது எமது பிரதான வளமான மனித வளத்தின் தோள்களில் சுமத்தப்பட வேண்டிய ஒரு பணியாகும். அதற்கான கலந்துரையாடல்களையும் வேலைத்திட்டங்களையும் நாம் ஆரம்பித்துள்ளோம். எமது பழமையான வரலாற்று மரபுகள், எமது அனுபவங்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்து இந்த இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். எனவே இந்த 78 ஆவது சுதந்திர தினத்தில் நாம் எமது இதயத்திலும் அறிவிலும் நிலைநிறுத்த வேண்டியது நாட்டைப் பற்றிய உறுதியான அர்ப்பணிப்பாகும். எனவே ஜனாதிபதி என்ற ரீதியில் நானும், எமது அமைச்சரவை, பாராளுமன்றித்தில் எதிர்க்கட்சித் தலைவர், அரச துறை, மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் என நாம் அனைவரும் இந்நாட்டை அனைத்துத் துறைகளிலும் கட்டியெழுப்புவோம் என்ற உறுதியான தீர்மானத்தை எடுப்போம்.

“உங்களுக்கு வேகமாகச் செல்ல வேண்டுமெனில் தனியாகச் செல்லுங்கள். ஆனால் வெகுதூரம் செல்ல வேண்டுமெனில் ஒன்றாகச் செல்லுங்கள்” என்று ஆபிரிக்கப் பழமொழி ஒன்று சொல்கிறது.

எமக்கு என்ன தேவை? எமக்கு நாம் ஒவ்வொரு துறையிலும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. பொருளாதாரத்தில் வெகுதூரம் செல்ல வேண்டும்.சட்டத்தின் ஆட்சியை மேலும் உறுதிப்படுத்த வேண்டும்.எமது சுற்றுச் சூழலை மேலும் பாதுகாக்க வேண்டும். அப்படியாயின் அந்தப் பயணம் தனியாகச் செல்ல வேண்டிய ஒன்றல்ல. தனியாக வேகமாகச் செல்ல முடியுமான போதிலும் சிறிய தூரமே செல்லலாம். எமக்குத் தேவைப்படுவது வெகுதூரம் செல்வதாகும். அந்த நீண்ட தூரத்தை எட்டுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாகச் பயணிப்போம் என அழைப்பு விடுத்து விடைபெறுகின்றேன்” என்றும் தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026.02.04

முதல்வர் வேட்பாளராக களமிறங்குவேன்: அர்ச்சுனா திட்டவட்டம்!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்று வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“மாகாணசபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையென்பதால் அது நடக்குமா என்பது சந்தேகமே.” எனவும் அவர் கூறினார்.

“தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் வடக்கு மாகாணசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன். மக்கள் விரும்பினால் என்னை ஏற்பார்கள், இல்லையேல் நிராகரிப்பார்கள்.

மக்கள் ஆணை வழங்கினால் சில தீர்வு திட்டங்கள் உள்ளன. நிராகரித்தால் எனது சொந்த தொழிலை நான் முன்னெடுப்பேன்.” என அர்ச்சுனா எம்.பி. மேலும் கூறினார்.

மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் மரணம்: முல்லைத்தீவில் துயரம்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். பாட்டியுடன் புல்லு வெட்டுவதற்காகச் சென்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

முல்லைத்தீவு – புளியங்குளம் – அலகரை கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோகனராசா லோயிதன் என்பவரே உயிரிழந்தார்.

சிறுவனும் அவரின் பாட்டியும் புல்லு வெட்டுவதற்காக தோட்டப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு யானைக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியது. அப்போது, மின்சாரத்தால் தாக்குண்டு அவர் தூக்கி வீசப்பட்டார்.

அங்கு நின்றவர்கள் அவரை மீட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“அனைவரதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளது”

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம்.

மானிடப் பண்புகள் நிறைந்த, திறமைமிக்க, புத்திசாலித்தனமான எதிர்காலச் சந்ததியினருக்காக எமது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும் உங்கள் அனைவரதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

பலமான பொருளாதார அடிப்படையொன்றின் மீது நாட்டை நிலைப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக அரசியல் மற்றும் அரசியல்வாதி பற்றிய புதிய முன்மாதிரிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுதல், இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவத்துடனும், கௌரவத்துடனும், மனிதநேயத்துடனும் மக்களை நேசிப்பதற்காக அவர்களை வழிப்படுத்துதல், கிராமிய வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முன்னுரிமை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பாதிப்புக்குள்ளான அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடிய எந்தவொரு குடிமகனும் கைவிடப்படாத விதத்தில், அத்தியாவசிய சமூகக் குழுக்களுக்கான அணுகலை உறுதிப்படுத்தும் நலன்புரிப் பொறிமுறைகளை உருவாக்குதல், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் ஊடாகப் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் உலகின் அனைத்து நாடுகளுடனும் தேசங்களுடனும் மிகவும் நம்பகமான முறையில் உறவுகளைப் பேணக்கூடிய அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட நாடாகச் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையை மீண்டும் ஒரு வர்த்தக நாமமாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த இலக்குகளை அடைவதற்காகக் குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டிய காலமே ஆரம்பமாகியிருக்கின்றது.

அதற்காக அனைத்து இலங்கை மக்களும் மிகவும் பலமாகவும் நம்பிக்கையுடனும் அணிதிரளுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறும் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

“‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை,உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்”

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

சவால்களுக்கு மத்தியில், கூட்டாகவும் உறுதியுடனும் செயற்பட்டு நமது நாட்டை தூய்மையான அரசியல் கலாசாரத்திற்குள் கட்டியெழுப்பப்பட்ட அழகான இலங்கையாக சர்வதேச அளவில் முத்திரை பதிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

நாம் பெற்றுள்ள பேரண்டப் பொருளாதார நன்மைகள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து இன சமூகங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே எமது அடுத்த முக்கிய நோக்கம் ஆகும். அவ்வாறு இன்றி, புதிதாக கட்டியெழுப்பப்படும் அபிவிருத்தி செயல்முறையின் உண்மையான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அண்மைய காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய இயற்கை அனர்த்தத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்தது.

அந்த அனர்த்தத்தின் அனுபவம் வேதனையாக இருந்தபோதிலும், கடந்த ஒன்றரை வருட குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பிய உறுதியான அடித்தளங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் பணியில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றோம்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலங்களில், நமது நாட்டை சரியான திசையில் வழிநடத்தவும், தேசிய ரீதியில் அடையவேண்டிய இலக்குகளை அடையவும், ஒற்றுமையாக வாழவும் வரலாற்றில் கிடைத்த பொன்னான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்யாமல், நமது நாட்டை முன்பை விட மிகவும் முன்னேறிய, வலிமையான மற்றும் கௌரவத்துக்குரிய நாடாக மேம்படுத்துவதற்கு நாம் உறுதியுடன் செயல்படுவோம்.

நமது பெருமைமிக்க கலாசாரம், பண்டைய வரலாறு மற்றும் சிறந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதன் மேல் உறுதியாக நிலைத்து நின்று, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்களின் ,பெருமைமிக்க நாடு பற்றிய கனவு கலைந்த போதும் , இருபத்தியோராம் நூற்றாண்டில் அந்தக் கனவை நனவாக்கி, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முன்னேறிய, வளமான மற்றும் சிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்பி, நாம் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என நான் திடமாக நம்புகிறேன்.

இதன்போது, இந்நாட்டின் அனைத்து மக்களின் வலிமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதிப்பாட்டில் நாம் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை,உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைவதற்கு, ஊக்கமளிக்கும், அர்த்தமுள்ள தேசிய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிதரன் நீக்கம்: தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சாணக்கியன் நியமனம்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிதரனை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அறிவுறுத்தியிருந்தது.

அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரை கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அண்மையில் திருகோணமலையில் நடந்த அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக எம்.ஏ. சுமந்திரன் அறிவித்திருந்தார்.

எனினும், சிறிதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்படவில்லை என்று கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்த நிலையில், கட்சியின் செயலாளரினால் புதிய நாடாளுமன்றக் குழுத் தலைவராக இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிப்பரீட்சைக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அழைப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ பொறுப்பல்ல என்ற போதிலும், ஒரு தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்த மிக நீண்ட கலந்துரையாடலில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் பணியாற்றி அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், எனவே ஆசிரியர் சேவை யாப்பிற்கு இணங்க, போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அவர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, ஜனாதிபதி மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன : அரசியலமைப்பு பேரவை ஒப்புதல்!

சமுதிகா ஜயரத்னவை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (03) கூடியது.

இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு ஜனாதிபதியால் இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நான்கு பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதியால் ஐந்தாவது தடவையாக அனுப்பட்டுள்ள பெயருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக்கிண்ண தொடர் 7 ஆம் திகதி ஆரம்பம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

“ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடரை முன்னிட்டு இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது டி20 உலகக்கிண்ண தொடருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“ ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவின் இணை அனுசரணையில் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 ஆம் திகதிவரை நடைபெறுகின்றது.

இலங்கையில் 20 போட்டிகளை நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள அனைத்து அணிகளுக்கும் நன்றிகள். அவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும்.” -என்றார்.

 

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு”

0
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போர்ச் சூழலால் மத்திய...

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

0
  "Rebuilding Sri Lanka" ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில், "Rebuilding Sri Lanka" திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும்...

இது ஒரு மகத்தான நாள்: பொற்காலம் பிறக்கும்!

0
இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ள நிலையில், சர்வதேச அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...