Home Blog Page 851

சாந்தனை இலங்கை அழைத்துவர ஏற்பாடு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்துள்ளார்.

இதன்போதே அவரை இலங்கைக்குள் அனுமதிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

பறிபோனது 14 வயது சிறுவனின் உயிர் – பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டிய ஐவர் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் நியூட்டன் தோட்டத்தை சேர்ந்த முருகன் அஷான் என்ற 14 வயது மாணவன் நேற்று முன்தினம் சிகையலங்கார நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் சிலர் மரம்வெட்டிகொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் மரக்கிளையொன்று சிறுவன்மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாறப்பட்டார். வைத்தியசாலை செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனையடுத்து மரம் வெட்டிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

இலங்கை அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 439 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால், மெத்யூஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

பின்னர் 241 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 3-வது நாள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது. 4 ஆவது நாட் ஆட்டம் இன்று ஆரம்பமானது. ஆப்கான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 296 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் அவ்வணி இழந்தது.

56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

8 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

மரம் முறிந்து விழுந்து ஐந்து வயது மாணவர் பலி – மேலும் இருவர் காயம் – கம்பளையில் சோகம்!

(UPDATE)

கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 வயதான மொஹமட் அஸ்வி…

இவர் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்தவர்.

இரு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தில் இவரே மூத்த மகன்.

முற்பகல் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 31 மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

அவ்வேளையிலேயே பக்கத்து காணியில் இருந்த மரமொன்றின் கிளை இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

காயமடைந்த மூன்று மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றுமொரு சிறுவன் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். மற்றுமொரு மாணவர் கம்பளை வைத்தியசாலையில் உள்ளார்.

……

முதலாம் இணைப்பு

மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இரு மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கையிலேயே மரம் சரிந்து விழுந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
காயமடைந்த இரு மாணவர்களும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கம்பளை, இல்லவத்துர பகுதியை சேர்ந்த மாணவரே உயிரிழந்துள்ளார்.

மலையகம், கிழக்கு அபிவிருத்தி குறித்து ஆராய்வு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா வை, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது இலங்கையின் அபிவிருத்திக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.

அநுர- இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

இந்திய அரசின் அழைப்பையேற்று டில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் இன்று பேச்சு நடத்தினர்.

இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த  ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர்.

சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்த ஜனாதிபதி – மகிழ்ச்சியில் மாணவர்கள்…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த இசைக்கருவிகள் பாடசாலைக்கு பெப்ரவரி 09 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

கடந்த நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது குறித்த மாணவர்களால் தங்களின் பாடசாலைக்கு இசைக் கருவிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

தங்கள் பாடசாலைக்கு திடீரென வருகை தந்த விருந்தினர் நாட்டின் ஜனாதிபதி என்பதை அறிந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அந்த சமயத்தில் உலங்குவானூர்திக்கு அருகில் வந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டறிந்தார்.

பாடசாலையில் இசைக்கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதன்படி, மிகக் குறுகிய காலத்தில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, டிரம்பெட், டிராம்போன், சாக்ஸபோன், கிளாரினெட், மவுண்டபிள் டெம்பரின் உள்ளிட்ட இசைக்கருவிகள் பரிசளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஞ்ஜித் கீர்த்தி தென்னகோன், வலயக் கல்விப் பணிப்பாளர் கே. ஜே. சுசில் விஜேதிலக, வலயக் கல்விப் பணிப்பாளர் எச். டி.தர்மசிறி, மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய அதிபர் எச். எம். யு. திரு.பி.ஹேரத், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

மரக்கிளை முறிந்து விழுந்து 14 வயது மாணவன் பலி – நோர்வூட் பகுதியில் சோகம்!

மரக்கிளை முறிந்து, விழுந்ததில் 14 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ள பரிதாபகரமான சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட் நியூட்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் தரம் 9 இல் கல்வி பயிலும் முருகன் அஷால் (வயது – 14) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிகையலங்கார நிலையத்துக்கு சென்றுகொண்டிருக்கையிலேயே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அவர், டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 03 ஆம் திகதி (நேற்று முன்தினம்) மதியம் 12 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

21 பவுண் தாலியை இரவலாக வாங்கி மோசடி செய்த யுவதி கைது!

யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம், அயலவரான யுவதி ஒருவர் கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது, தாலிக்கொடியை இரவலாக பெற்று அணிந்து சென்ற பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாக கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் வழமை போன்று, தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி, தாலிக்கொடியை திருப்பி கொடுத்த போது, கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர்ந்த தாலிக்கொடியை இரவல் கொடுத்த பெண், அதனை நகைக்கடை ஒன்றில் சோதித்த போது, அது போலியானது (கவரிங்) என தெரியவந்துள்ளது.

அதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, அயலவரான யுவதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, சுன்னாகம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவலாக பெற்ற தாலிக்கொடியை விற்று விட்டு, அதே போன்று போலி தாலிக்கொடியை (கவரிங்) செய்து, அதனை அப்பெண்ணிடம் கொடுத்தமை தெரிய வந்துள்ளது.
குறித்த யுவதியை பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிலி நாட்டில் காட்டுத் தீ – பலி எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி மடிந்தன.

அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியது. இதில் அங்குள்ள 1,200 வீடுகள் எரிந்து நாசமாகின. இந்தநிலையில் சிலியில் எரியும் காட்டுத் தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

வேகமாக பரவி வரும் இந்த தீயை அணைப்பது சவாலாக உள்ளது.

எனவே தீயை அணைக்கும் பணியில் மீட்பு படையினருக்கு உதவும்படி பொதுமக்களை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் கேட்டுக்கொண்டார். வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில் வெப்பநிலை 104 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

செய்தி

முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும!

0
" முன்னாள் எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும். எனவே. ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்." - அமைச்சர் வசந்த...

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை: விமானங்கள் பறக்க தடை!

0
  பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை. 1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என...

மரக்கறி விலைப்பட்டியல் (03.08.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...