Home Blog Page 850

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை என்பவற்றை பல்கலைக்கழகங்களாக மாற்றுவேன் – சஜித்

“ அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை என்பன ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஏனைய கட்சித் தலைவர்கள் 2024 இல் கூட மக்களை ஏமாற்றி, மாளிகை அரசியலில் ஈடுபட்டு – அரச மாளிகைகளில் சொகுசுகளை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்,நாட்டின் மாளிகைகள் நவீன தொழில்நுட்பம், ஆங்கிலம் என்பன கற்பிக்கும் பெரிய பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும். எனவே,மாளிகைகள் பற்றிய கனவுகளை வைத்துக் கொள்ளாதீர்கள்.

மொழியை மையமாக வைத்து அரசியல் நடத்தும் காலத்தை நிறுத்த வேண்டும். நாட்டிலுள்ள 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உயர் ஆங்கில மொழிக் கல்வியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இனம்,மதம், சாதி,குல பேதங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் கோஷங்களுக்கு பணயக்கைதிகளாக இருக்க வேண்டாம்.” – என்றார்.

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் சனத் நிஷாந்தவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் பலியாகினர்.
இவ்விபத்தையடுத்து சாரதி கைது செய்யப்பட்டார். பொலிஸ் காவலின்கீழ் சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

விபத்து இடம்பெறுவதற்கு முதல் நாள், குறித்த சாரதி பதிவிட்டிருந்த ஒரு சமூகவலைத்தள பதிவு ,விபத்தின் பின்னர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மரணம் தொடர்பிலேயே அந்த பதிவு அமைந்திருந்தது.

பறிபோனது 14 வயது சிறுவனின் உயிர் – பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டிய ஐவர் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் நியூட்டன் தோட்டத்தை சேர்ந்த முருகன் அஷான் என்ற 14 வயது மாணவன் நேற்று முன்தினம் சிகையலங்கார நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் சிலர் மரம்வெட்டிகொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் மரக்கிளையொன்று சிறுவன்மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாறப்பட்டார். வைத்தியசாலை செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனையடுத்து மரம் வெட்டிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

மலையக மக்களுக்கு காணி உரிமை – கொழும்பில் நாளை விசேட கூட்டம்!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கான விசேட கூட்டமொன்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அவரது அமைச்சில் நாளை (05) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், காணி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் உட்பட விடயதானத்துடன் பொறுப்புரைய உயர்மட்ட அரச அதிகாரிகளின் பங்கேற்புடனேயே இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், புதிய கிராமங்கள் அபிவிருத்தி சபை என்பவற்றின் பிரதானிகளும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கூட்டு பத்திரத்துக்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் முழு ஆதரவு என பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே காணி உரிமையை ஆவணமாக வழங்குவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் பற்றி நாளை கூட்டத்தில் ஆராயப்பட்டு, காத்திரமான முடிவு எடுக்கப்படவுள்ளது.

மலையக பெருந்தோட்ட மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான நடவடிக்கையின் மற்றுமொரு அங்கமே இது. இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனி வீடுகளுக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.

சாந்தனை இலங்கை அழைத்துவர ஏற்பாடு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்துள்ளார்.

இதன்போதே அவரை இலங்கைக்குள் அனுமதிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

பறிபோனது 14 வயது சிறுவனின் உயிர் – பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டிய ஐவர் கைது!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் நியூட்டன் தோட்டத்தை சேர்ந்த முருகன் அஷான் என்ற 14 வயது மாணவன் நேற்று முன்தினம் சிகையலங்கார நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் சிலர் மரம்வெட்டிகொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் மரக்கிளையொன்று சிறுவன்மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாறப்பட்டார். வைத்தியசாலை செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனையடுத்து மரம் வெட்டிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

இலங்கை அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 439 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால், மெத்யூஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

பின்னர் 241 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 3-வது நாள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது. 4 ஆவது நாட் ஆட்டம் இன்று ஆரம்பமானது. ஆப்கான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 296 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் அவ்வணி இழந்தது.

56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

8 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

மரம் முறிந்து விழுந்து ஐந்து வயது மாணவர் பலி – மேலும் இருவர் காயம் – கம்பளையில் சோகம்!

(UPDATE)

கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்த 5 வயதான மொஹமட் அஸ்வி…

இவர் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்தவர்.

இரு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தில் இவரே மூத்த மகன்.

முற்பகல் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 31 மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

அவ்வேளையிலேயே பக்கத்து காணியில் இருந்த மரமொன்றின் கிளை இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

காயமடைந்த மூன்று மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றுமொரு சிறுவன் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். மற்றுமொரு மாணவர் கம்பளை வைத்தியசாலையில் உள்ளார்.

……

முதலாம் இணைப்பு

மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இரு மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கையிலேயே மரம் சரிந்து விழுந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
காயமடைந்த இரு மாணவர்களும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கம்பளை, இல்லவத்துர பகுதியை சேர்ந்த மாணவரே உயிரிழந்துள்ளார்.

மலையகம், கிழக்கு அபிவிருத்தி குறித்து ஆராய்வு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா வை, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது இலங்கையின் அபிவிருத்திக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.

அநுர- இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

இந்திய அரசின் அழைப்பையேற்று டில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் இன்று பேச்சு நடத்தினர்.

இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த  ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர்.

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது!

0
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒப்பமிடாது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி...

வடக்கில் 70 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படலாம்!

0
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

சமஷ்டியை வலியுறுத்தி போராட்டம்

0
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை - வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...