வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில், ஒலியை விட வேகமாகச் செல்லும் ‘ஹைப்பா்சோனிக்’ ஏவுகணையையும், கடந்த டிசம்பரில் நீண்ட தூரம் பாயும் ‘க்ரூஸ்’ ஏவுகணையையும் அந்த நாடு சோதித்திருந்தது.
இது தவிர, அணுசக்தியால் இயங்கும் தனது முதல் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்கி வருவதாக வடகொரியா வெளியிட்ட புகைப்படங்களை வெளியிட்டு அதிா்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வட கொரிய தலைநகா் பியாங்யாங்கிற்கு வடகிழக்கே உள்ள பகுதியிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதை தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவம் உறுதி செய்துள்ளது.
முதல் ஏவுகணை பிற்பகல் 3.50 மணியளவிலும், அடுத்த ஏவுகணை 4. 02 மணிக்கும் ஏவப்பட்டதாகத் தெரிகிறது. சுமாா் 350 கிலோமீட்டா் தூரம் பயணித்த இந்த ஏவுகணைகள், கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஜப்பான் எல்லைக்கு வெளியே விழுந்தன.
ஜப்பான், தென் கொரியா கண்டனம்: வட கொரியாவின் இந்தப் புதிய சோதனை, பிராந்திய அமைதியைச் சீா்குலைப்பதாக தென் கொரியாவும், ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வட கொரியாவின் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் ஜப்பான் மட்டுமன்றி, ஒட்டுமொத்த சா்வதேச சமூகத்தின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஜப்பான் கடல் எல்லைக்கு வெளியே இந்த ஏவுகணைகள் விழுந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து வடகொரிய ஏவுகணைகளின் நகா்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்கத் தயாராக இருப்பதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிராக பெப்ரவரி 2ஆம் திகதியே போராட்டம்: ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு!
கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி, எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவிருந்த கவனவீர்ப்புப் போராட்டம், எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கின் பொது அமைப்புகளின் வேண்டுகோள் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“அரசால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோருவது தொடர்பில், வவுனியா வடக்கைச் சேர்ந்த பொது அமைப்புகளுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து நெடுங்கேணியில் நேற்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தக் கிவுல் ஓயா திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கலந்துகொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.” – என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆபத்துகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக, வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனவீர்ப்புப் போராட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வவுனியா வடக்கின் பொது அமைப்புகளின் வேண்டுகோள் மற்றும் ஆலோசனையின் பிரகாரம், முன்னதாக எதிர்வரும் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த கவனவீர்ப்புப் போராட்டத்தை, 02 ஆம் திகதி (திங்கட்கிழமை) மேற்கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டு, தீர்மானம் இறுதி செய்யப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை, நெடுங்கேணி பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது”- எனவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வவுனியா வடக்கைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் பா. சத்தியலிங்கம், து. ரவிகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் உயிரிழப்பு!
விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் இன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
புனே மாவட்டம், பாராமதி விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது.
தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது விபத்து எனத் தகவல் வெளியாகி இருந்தது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் , அவரது மெய்பாதுகாவர்கள் மற்றும் விமானி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
குளவிக்கொட்டி பிரதிக் கல்வி பணிப்பாளர் உயிரிழப்பு: முல்லைதீவில் சோகம்!
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதான அன்ரனி ஜோர்ச் என்பவரே உயிரிழந்தவராவார்.
மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பழைய கொலணிப் பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்று சென்ற பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் 5 மாணவர்களையும் கொட்டியுள்ளன.
குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளார்.
குளவித் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடிய தூதுவருடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு: தமிழர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!
இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடந்த இந்தச் சந்திப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்றனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான அவர்களின் நிலைப்பாடுகள், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் அதனை அடைவதற்கான எதிர்கால நகர்வுகள், மாகாண சபை தேர்தல்கள் மற்றும் ஜனநாயக ரீதியிலான அதிகாரப் பகிர்வுக்கான முக்கியத்துவம், போருக்குப் பின்னரான மீளெழுச்சி மற்றும் கனடிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் கனடியத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குச் சென்று துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவைச் சந்தித்ததுடன், வடமாகாண ஆளுநர் வேதநாயகனை அவரது பணியகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 4வது டி20 போட்டி இன்று!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (28) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
முதல் 3 ஆட்டங்களில் அதிரடி பேட்டிங்கால் மிரட்டி தொடரை வசப்படுத்திய இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆர்வத்தில் உள்ளது.
ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து! டி-20 போட்டியில் பதிலடி கொடுக்குமா இலங்கை?
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
முதல் போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில், அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று 2 -1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து தொடரை வென்றுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 357 ஓட்டங்களைப் பெற்றது.
358 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 304 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பெத்தும் நிஸ்ஸங்க (50), காமில் மிஷார (22) ஆகிய இருவரும் 31 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும், காமில் மிஷார, குசல் மெண்டிஸ் (20), பெத்தும் நிஸ்ஸன்க ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
துடுப்பாட்ட வரிசையில் தரம் உயர்த்தப்பட்ட பவன் ரத்நாயக்கவுடன் அணித் தலைவர் சரித் அசலன்க (13) அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தார். ஆனால் மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது நான்காவதாக சரித் அசலங்க ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ஜனித் லியனகே (22) அநாவசியமாக இல்லாத ஒரு ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனதுடன் சற்று நேரத்தில் தனஞ்சய டி சில்வா (9) ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்கவும் துனித் வெல்லாகேயும் 7ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை கௌரவமான நிலையில் இட்டனர்.
வெல்லாலகே 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்து களம் புகுந்த வனிந்து ஹசரங்க 9 ஓட்டங்களுடன் இலகுவான பிடிகொடுத்து வெளியேறினார்.
இந் நிலையில் பவன் ரத்நாயக்கவுக்கு சதம் குவிக்க முடியாமல் போகுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ஜெவ்றி வெண்டசே (14) ஒரு பக்கத்தில் தாக்குப்பிடித்து பவன் ரத்நாயக்க சதம் குவிக்க உதவினார்.
கடைசிவரை போராடிய பவன் ரத்நாயக்க 115 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ{டன் 121 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் டோசன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இலங்கை மண்ணில் இலங்கைக்கு எதிராக 300 ஓட்டங்களுக்கு மேல் இங்கிலாந்து குவித்தது இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
மரக்கறி விலைப்பட்டியல் (28.01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
சுதந்திர தினம் குறித்து மலையக அரசியல் அரங்கம் விடுத்துள்ள அழைப்பு!
78வது சுதந்திர தினத்தை “நாங்களும் இலங்கையர்களே”எனும் கோஷத்துடன் மலையக மக்கள் அனுஷ்டிக்க என்று என்று மலையக அரசியல் அரங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
“இலங்கை அந்நியராட்சியில் விடுபட்டு சுதந்திர நாடான போதும்; மலையகத் தமிழ் மக்களை அந்நியராகப் பார்க்கும் மனநிலையே இலங்கைக்குள் காணப்படுகிறது.
அண்மைய டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னதான மீட்பு, மீள்கட்டுமான நடவடிக்கைகளில் அவை தெளிவாக வெளிப்படுகிறது.
இலங்கை அரசு அறிவித்துள்ள மீட்பு நிவாரணங்கள் முதல் மீள்கட்டமைப்பு அறிவிப்புகள்வரை மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர்.
எனவே இந்தப் புறக்கணிப்பை எடுத்துக்காட்டும் பொருட்டும், மலையகத் தமிழ் மக்களையும் இலங்கையர்களாக இணைத்து மீள்கட்டுமான, அபிவிருத்தியை முன்னெடுக்க வலியுறுத்தியும் மலையகப் பகுதிகளில் அனர்த்தம் இடம்பெற்ற இடங்களில் நின்று “நாங்களும் இலங்கையர்களே” என இலங்கை தேசியக் கொடியை ஏற்றி 78வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்க மலையக அரசியல் அரங்கம் அழைப்பு விடுக்கின்றது.
2026 ஜனவரி 24ஆம் திகதி இடம்பெற்ற மலையக அரசியல் அரங்கத்தின் உயர்பீடக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ மலையகத்தில் டித்வா அனர்;த்தம் இடம்பெற்ற இடங்களில்; ஒன்றுசேரக்கூடிய மக்கள் இலங்கை நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி ‘நாமும் இலஙகையரே’ எனும் கோஷத்தை உரத்து வலியுறுத்திக் கூறுவதன் மூலம் நாட்டு மக்களினதும், அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தைப் பெறுதல் வேண்டும்.
இந்த முன்மொழிவை மலையக அரசியல் அரங்கம் முன்வைக்கின்றபோதும் இந்த எண்ணக்கருவை வலியுறுத்த விரும்பும் யாவரும் சுயாதீனமான குழுக்களாகவோ அல்லது தமது அமைப்புகள் சார்ந்தோ முன்னெடுப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இந்த எண்ணக்கருவின் மூலம் “நாமும் இலங்கையரே” “எங்கள் மீது பாரபட்சம் காட்டாதீர்கள்” எனும் கோரிக்கையை பொதுவெளியில் முன்வைப்பதே அடிப்படையாகும்.
இந்த எண்ணக்கருவையும் செயன்முறையையும் முன்னெடுக்கும் வகையில் இந்தத் தகவலை பரவலடையச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஊடகங்களையும் சமூக ஊடனத் தளங்களையும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” – என்றுள்ளது.















