Home Blog Page 91

விமான விபத்தில் 15 பேர் பலி: கொலம்பியாவில் சோகம்!

கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்திலுள்ள கிராம பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அரசுக்கு சொந்தமான Satena என்ற விமான சேவை நிறுவனமே குறித்த விமான சேவையை வழங்கியுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்பதை கொலம்பியாவின் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விமானம் பயணத்தை ஆரம்பித்து 12 நிமிடங்களில் தொடரை இழந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

விமான விபத்து இடம்பெற்ற கொலம்பியா – வெனிசுலா எல்லைப் பகுதியானது நாட்டு இராணுவத்துக்கு எதிராக சட்டவிரோத ஆயுத குழுக்கள் செயல்படும் பகுதியெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

13 பயணிகளும், இரு விமான அதிகாரிகளும் விமானத்தில் இருந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 36 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

 

 

 

வரிசை யுகத்தை முடித்த தலைவரே ரணில்: ஆதரவாக முன்னாள் எம்.பிக்கள் களத்தில்!

“ பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும், ராஜித சேனாரத்ன , மஹிந்த அமரவீர உட்பட முன்னாள் எம்.பிக்களும் வருகை தந்திருந்தனர்.

இதன்போதே மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டில் வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் ரணில். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டபோது அவருடன் இருந்தோம். தற்போதும் நிற்கின்றோம்.” – என்றார்.

அதேவேளை, நீதிமன்றத்தை நாம் மதிக்கின்றோம். நீதிமன்றம் ஊடாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மேலும் சிலர் நம்பிக்கை வெளியிட்டனர்.

உரிய நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்!

“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் உரிய நேரத்தில் வரும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் இன்று (28) கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தேவைக்கேற்ப பிரேரணைகளை கொண்டுவருவதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் நாடகம் அரங்கேற்றாமல் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வையுங்கள்!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி முன்வைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பதில் நாடாளுமன்ற செயலாளர் பணி இடைநீக்கப்பட்ட விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு சபாநாயகருக்கு எதிராக எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக வெளியாகும் தகவல் தொடர்பில் அமைச்சரிடம் நேற்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்குமாறு நாம் எதிரணியிடம் கோருகின்றோம்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிரணியிடம் நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழு கூட்டத்தில் வினவப்பட்டது. இதன்போது உரியநேரத்தில் முன்வைக்கப்படும் என்றார்கள், ஆனால் கால எல்லையை குறிப்பிடவில்லை.

கையொப்பம் திரட்டி படம் காட்டுவதுடன் நின்றுவிடாமல் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.” – என்றார் அமைச்சர்.

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரான்சில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில்கொண்டு 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டமூலத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு 131 பேர் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றபட்டு கீழவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வாக்கெடுப்பை வரவேற்றார். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும், இளைஞர்கள் ஆன்லைன் தளங்களால் பாதிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரான்ஸ் நாட்டு குழந்தைகளின் மூளைகள் விற்பனைக்கு அல்ல என்றும், கணினி நிரலின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலியாவிற்கு பிறகு சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் 2-வது நாடாக பிரான்ஸ் மாறும்.

ரணிலின் செயலாளரான சமன் விளக்கமறியலில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவைக் கைது செய்யப் பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தன.

ரணிலின் துணைவியார் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்ற விவகாரம் தொடர்பான விசாரணையில் சமன் ஏக்கநாயக்கவைக் கைது செய்ய சட்டமா அதிபரிடமிருந்து குற்றப் புலனாய்வுத்துறைக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றன.

அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் தமது வீட்டில் சமன் ஏக்கநாயக்க இருக்கவில்லை.

அவர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இன்றைய விசாரணைகளின் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயர் நிதி ஒழுக்கத்தை பேணும் அரசாங்கம்: IMF பாராட்டு!

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இந்தப் பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டதுடன், அனத்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தனர்.

இலங்கைப் பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில் ஏற்பட்ட இந்தப் பேரிடர் குறித்து தமது வருத்தத்தைத் தெரிவித்த பிரதிநிதிகள் குழு, சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் அரசாங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகளைப் பாராட்டினர்.

அனர்த்தத்தின் போது அரசாங்கம் செயற்பட்ட விதம், தம்முடன் உரையாடிய பெரும்பாலான மக்களால் பாராட்டப்பட்டதாக இங்கு பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியதுடன், இது அரசாங்கம் ஈட்டிய முக்கியமான வெற்றியாகும் எனவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்துடன், கடந்த ஆண்டில் அரசாங்கம் பேணிய உயர் நிதி ஒழுக்கம் இந்த சவாலை எதிர்கொள்வதில் பிரதான காரணி என்று சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள் திறைசேரியில் மேலதிக நிதியை பேணியதாலே அதற்காக அரசாங்கத்தினால் 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டை சமர்ப்பிக்க முடிந்துள்ளது எனவும் இது மிகவும் பாராட்டுக்குரிய விடயம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடுமையான பேரிடர் நிலைமையிலும் கூட தற்பொழுது உரிய பொருளாதார திசையில் பயணிப்பதாக சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையுடன் முன்னெடுக்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளாமல், அதன் 6 வது தவணையை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தப் பேரிடரால் வறுமையிலுள்ள கிராமப்புற மக்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புபடும் உட்கட்டமைப்பு வசதி மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் வீழ்ச்சியடைந்ததாகவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கிராமிய மக்களின் அன்றாட வாழ்வை மீளக் கட்டியெழுப்பவதற்காக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகள் எவ்வகையிலும் முறையான நிதி முகாமைத்துவத்திலிருந்து விலகி, பொறுப்பற்ற ஒரு பொறிமுறையொன்றை முன்னெடுப்பதைக் குறிக்காது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புள்ளிவிவரங்கள் மூலம் காட்டப்படும் பொருளாதார வெற்றிகள் உண்மையாகவே சாதாரண மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கடந்த கால பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட நிலைமைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் அந்த திசையிலேயே திட்டமிடப்பட்டுள்ளன என்றும், அதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல், அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan), சஞ்சய பாந்த் (Sanjaya Panth) உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

25 நாட்களுக்குள் 2 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஜனவரி 1 முதல் 25 வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு 2 லட்சத்து 23 ஆயிரத்து 645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 15 ஆம் திகதி மாத்திரம் 10 ஆயிரத்து 483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஜனவரி 1 முதல் 25 வரை இந்தியாவில் இருந்து 41 ஆயிரத்து 603 பேரும், பிரிட்டனில் இருந்து 23 ஆயிரத்து 329 பேரும், ரஷ்யாவில் இருந்து 22 ஆயிரத்து 876 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து இயக்​கும் படத்தில் சிலம்​பரசன் நடிக்க இருக்​கிறார்.

இப்​படத்​துக்கு ‘காட் ஆஃப் லவ்’ எனப் பெயரிடப்​பட்​டுள்ளது. ஏஜிஎஸ் நிறு​வனம் தயாரிக்​கும் இப்​படத்தின் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் சிலம்​பரசன் ஜோடி​யாக மிருணாள் தாக்​குர் நடிக்க இருப்​ப​தாக​வும் அனிருத் இசையமைக்க இருப்​ப​தாக​வும் கூறப்படுகின்றன.

கால அவகாசம் கோரிய ஷிரந்திக்கு சமூக பொறுப்பு குறித்து பாடமெடுக்கிறது அரசு!

” முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது.

அவர் கால்டன் பாலர் பாடசாலையை நடத்திவருபவர். எனவே, சட்டத்தை மதித்து முன்மாதிரியாக திகழ வேண்டும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

‘சிரிலிய’ விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு வருவதற்காக இரு வாரங்கள் ஷிரந்தி ராஜபக்ச அவகாசம் கோரிய விவகாரம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ விசாரணைக்கு அழைக்கும்பட்சத்தில், தவிர்க்க முடியாத காரணம் எனில் முதல் சந்தர்ப்பத்தில் அவகாசம் கேட்க முடியும். அவ்வாறு அவர் செய்திருக்ககூடும்.

ஷிரந்தி ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி. முதல் பெண்மணியாக இருந்தவர். நாமல் ராஜபக்சவின் தாய். எனவே, சட்டத்தை மதிக்க வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” – ஈரான் ஜனாதிபதி

0
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

ரஷ்ய போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும்...