Home Blog Page 90

கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவு!

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மெய்நிகர் மூலமாகக் கூடியது. இதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாது,

“இலங்கை அரசு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்திருப்பதால் மாகாண சபைத் தேர்தல் பல வருடங்கள் தள்ளிப்போகலாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன்,

தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கான அழுத்தங்களை ஏனைய கட்சிகளுடன் இணைந்து உருவாக்க வேண்டும் எனவும், மாகாண சபைத் தேர்தலின் அவசியத்தை இராஜதந்திர சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியா, நெதர்லாந்து, மற்றும் கனடா தூதுவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் அரசு கொண்டுவர யோசிக்கும் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும், அந்த யாப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும், அதில் அடங்க வேண்டிய விடயங்கள் குறித்தும் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கருத்தொற்றுமைகள் ஏற்படுத்தப்பட்டு ஒருமித்த ஒரு தீர்வுத் திட்டத்தை அரசிடம் கையளிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பல்வேறுபட்ட ஜனாதிபதிகளால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு வரைவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றை ஆராய்ந்து, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரைவை அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.” – என்றுள்ளது.

மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்து!

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பி, இன்று ஆட்சியில் இருக்கும்போது மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் வேண்டாமென எமது கட்சியை சேர்ந்த 20 ஆயிரம்பேரை கொன்றவர்கள்தான் இன்று ஆட்சியில் உள்ளனர். இவர்களிடம் எவ்வாறு சிறப்பான எதிர்காலத்தை எதிர்பார்க்க முடியும்?

இந்த அரசாங்கம்மீது மக்கள் செல்வாக்கு உள்ளதா என்பதை அறிய வேண்டுமானால் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் வாக்குறுதி உள்ளது. எனினும், தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

முடிந்தால் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். அப்போது மக்கள் யார் பக்கம் என்பது தெரியவரும்.”- என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி இணைவது உறுதியானது!

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிப்பது உறுதியான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கோரிக்கைக்கமையவே இணைந்து செயல்பட இரு கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த இணைவானது அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் எதிரணி பலம் தெரியவரும்.” – எனவும் அவர் மேலும் கூறினார்.

இரு தரப்பு இணைவு தொடர்பில் நீண்டகாலமாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்தாலும், இணைவுக்குரிய கால எல்லை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் விரைவில் நடக்குமென தற்போது நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

புகையிலை, மது பாவனையால் இலங்கையில் வருடாந்தம் 22,000 பேர் உயிரிழப்பு!

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு போன்ற விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடியபோதே இவ்விடயங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதற்கு அமைய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தொடர்பில் இங்கு முதலில் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுப்பாவனை காரணமாக வருடமொன்றுக்கு 22,000 பேர் உயிரிழப்பதாகவும், வருடமொன்றிற்கு ரூ.225 பில்லியன் முதல் ரூ.240 பில்லியன் வரையிலான தொகை இழக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இந்த சூழ்நிலையை அடிப்படையாக சமாளிக்க தேவையான சட்ட விதிகள் உட்பட, புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சிகரெட்டுக்கள் தனித்தனியாக விற்பனை செய்வதை உலகில் 104 நாடுகள் தடைசெய்துள்ளதாகவும், இந்த நாட்டிலும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தனிப்பட்ட சிகரெட்டுகள் விற்கப்படும்போது, சிகரெட் பெட்டிகளில் உள்ள எச்சரிக்கைச் செய்திகள் நுகர்வோரைச் சென்றடைவதில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிகரெட்டுகளின் விலைகளை நிர்ணயித்த பின்னர் அவற்றின் மீது வரி விதிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையினர் தமது சட்டத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் திருத்தங்கள் மற்றும் குறித்த அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான ஆதரவைக் குழு வழங்கும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், மருத்துவமனையின் அதிகாரிகள் அதன் தற்போதைய நிலை குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர்.

மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை உட்பட, மருத்துவமனையில் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஊழியர்களுக்கான தேவை இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் குழுவிடம் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், இலங்கையில் தற்போது 3 தேசிய வைத்தியசாலைகள் இருப்பதாகவும், தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன் விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும் என நம்புவதாகவும் கூறினார்.

ஊழியர்களை மீண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உள்ளகக் கணக்காய்வாளரை நியமித்து வைத்தியசாலையின் நிர்வாகம் உள்ளிட்ட அதன் செயல்திறனை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க வேண்டியதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

விசாரணை ஒரு மாதத்துக்குள் நிறைவு: ரணிலுக்கு எதிராக மார்ச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று, சட்டமா அதிபர் நேற்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.

பொது சொத்துச் சட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, லண்டனுக்கு சென்றதன் மூலம் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் பிணையை ரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் தரப்பில் கோரப்பட்ட போதும், முன்னைய நீதிவான் முன்னர் பிறப்பித்த பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என்று நீதிவான் நெத்திகுமார தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இதயத்தின் இரண்டு நரம்புகள் அடைபட்டுள்ளதாகவும், மாற்று வழியின் மூலம் இரத்த ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் அவரது சட்டவாளர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்த போதும், கொழும்பு தேசிய மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் “போரிஸ் ஜான்சன்” புத்தகத்தைப் படித்துக் கொண்டே நேரத்தைச் செலவிட்டார் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், இந்த சந்தேகநபர் சட்டவிரோதமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் கோரிக்கை இல்லாமல் தேசிய மருத்துவமனையின் மருத்துவக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

பிரித்தானியாவுக்கான தூதுவர் சரோஜா சிறிசேன மற்றும் 13 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய, குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் குழு, லண்டன் சென்றது.

இந்த அறிக்கைகள் அனைத்தும் அவரது லண்டன் பயணம் ஒரு தனிப்பட்ட பயணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அது ஒரு அரசுமுறைப் பயணம் என்றால், பிரித்தானிய அரசாங்கத்தின் தலையீடு இருக்க வேண்டும்.

லண்டனில் உள்ள தூதரக அதிகாரிகள், வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ கடிதமும் கிடைக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளனர் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பு சட்டவாளரான, திலக் மாரப்பன, அழைப்பிதழ் உண்மையானதாக போலியானதா என்பதை உறுதிப்படுத்த, பல்கலைக்கழக அதிகாரிகளிடமிருந்து அறிக்கையைப் பெறாமல், தூதரக அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதால் ஆவணத்தின் நம்பகத்தன்மையை கண்டறிய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு ஏப்ரல் 29 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த வழக்குத் தொடர்பாக இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டு பெப்ரவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார்.

இதை இயக்கி நாயக​னாக தருண் பாஸ்​கர் நடித்திருக்கிறார். மலை​யாளத்​தில் வெற்றி பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற படத்​தின் ரீமேக்​கான இப்படம் நாளை வெளி​யாகிறது. இப்​படத்​தின் ஹீரோ தருண் பாஸ்​கரை, ஈஷா ரெப்பா காதலித்து வரு​வ​தாக​வும் இரு​வரும் விரை​வில் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன.

இதுபற்றி ஈஷா ரெப்​பா​விடம் கேட்​ட​போது, “உங்​கள் கட்டுப்​பாட்​டில் இல்​லாததை உங்​களால் திட்​ட​மிட்​டுச் சொல்ல முடி​யாது. சரி​யான நேரத்​தில் சரி​யான விஷயங்கள் நடக்​கும் என்று நம்​பு​கிறேன். இதற்கு எந்த விளக்​க​மும் கொடுக்க விரும்பவில்​லை. என் வாழ்க்கையில் குறிப்​பிடத்​தக்க நிகழ்​வு​கள் ஏதும் நடந்தால், அதை நானே அறி​விப் பேன்” என்​றார்.

தருண் பாஸ்​கர் கூறும்​போது, “திரு​மணம் பற்றி அறிவிப்பதற்​கு சரி​யான நேரத்​துக்​காகக் காத்திருக்கிறேன். ஈஷா ரெப்​பா, ஒரு தோழியை விட அதிக​மாக, ஒரு துணை​யாக, எனக்கு எல்​லா​மு​மாக இருக்கிறார். அதில் மறைப்​ப​தற்கு ஒன்​றுமில்​லை. இது தனிப்​பட்ட விஷ​யம் என்​ப​தால், எனது அறி​விப்பு மற்​றவர்​களைப் பாதிக்​கலாம். எல்​லாம் சரி​யாக நடந்​தால், கடவுள் விரும்​பி​னால், விரை​வில் அறி​விப்​போம்” என்​றார்.

ஈரான்மீதான தாக்குதல் மிக மோசமாக இருக்கும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க போா்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நோக்கிப் பயணித்து வருகிறது.

இதனிடையே, டொனால்ட் டிரம்ப் தமது ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் மேற்படி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பெரும் கடற்படை ஈரானை நோக்கிச் செல்வதாகவும், விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஆபிரகாம் லிங்கன்’ இந்தப் படையை வழிநடத்தி விரைவாகப் பயணிப்பதாகவும், வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டதைவிட பெரும் படையாக இப்படை அமைந்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘வெனிசுவேலாவைப் போலவே ஈரானும் விரைவில் உடன்படிக்கைக்கு வரும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அணு ஆயுதங்கள் இல்லை என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்ற அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வருவார்கள். அதுவே அனைத்து தரப்புக்கும் நன்மை பயக்கக்கூடியது.

கடந்த காலத்தில், அமெரிக்க அறிவுறுத்தலை ஈரான் ஏற்காததால் ‘ஆபரேசன் மிட்நைட் ஹேமர்’ எனும் ஈரானுக்கு பேரழிவை ஏற்படுத்திய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த தாக்குதல் மிக மிக மோசமாக அமையும். அவ்வாறு ஒரு தாக்குதல் நடத்த அனுமதிக்காமல் நீங்கள் நடந்துகொள்ளுங்கள்’ எனும் பொருள்பட டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கனடா தூதுவருக்கு சிறிதரன் விளக்கம்!

கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழர் தாயகப் பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் அரசின் நிலைப்பாடுகள், திட்டமிட்ட தமிழர் நில அபகரிப்புக்கள், கிவுல் ஓயா திட்டம் போன்றவற்றின் ஊடாக தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்கள் கனடாவின் புதிய தூதுவருக்குச் சிறீதரன் எம்.பியால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

புதிய தூதுவராக வருகை தந்திருந்த இஸபெல்லா மார்ட்டின் மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக மேலதிக விடயங்களையும் ஆர்வமாகக் கேட்டறிந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் முளைத்துள்ள புதிய விகாரைகள், அரசியல் கைதிகள் தொடர்பான சில விடயங்களை ஆவணங்களுடன் புதிய தூதுவருக்குச் சிறீதரன் எம்.பி. தெளிவுபடுத்தியிருந்தார்.

சந்திப்பின்போது வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஒரு நினைவுச்சின்னமும் தூதுவர் இஸபெல்லா மார்ட்டினுக்குச் சிறீதரன் எம்.பியால் வழங்கிவைக்கப்பட்டது.

மரக்கறி விலைப்பட்டியல் (29.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” – ஈரான் ஜனாதிபதி

0
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

ரஷ்ய போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும்...