Home Blog Page 89

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது.

ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய் கன்​னா, அர்​ஜுன் ராம்​பால், சாரா அர்​ஜுன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ‘உரி: தி சர்​ஜிகல் ஸ்டிரைக்’ என்ற படத்தை இயக்​கிய ஆதித்யா தார் இயக்கி உள்​ளார். ‘ஸ்பை த்ரில்​லர்’ படமான இது, உளவு அதி​காரியை பற்​றிய கதையைக் கொண்​டது.

இந்த மூன்​றரை மணி நேரப் படம் வெளி​யான நாளி​லிருந்து அதிக வசூல் ஈட்டி வந்​தது. இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் மட்​டும் இது​வரை ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது. ‘பாகுபலி 2’, ‘கேஜிஎப் 2’, ‘புஷ்பா 2’ படங்​களுக்​குப் பிறகு இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த நான்​காவது படமாக ‘துரந்​தர்’ இடம்​பெற்​றுள்​ளது.

கடந்த ஆண்டு டிச.5-ம் தேதி வெளி​யான இப்​படம் இப்போது வரை இந்​தியாவில் ரூ.1,002 கோடி வசூல் ஈட்டியுள்​ளது. இதற்கு முன், ‘புஷ்பா 2’ ரூ.1,471 கோடி​யும் ‘பாகுபலி 2’ ரூ.1417 கோடி​யும், ‘கேஜிஎஃப் 2’ ரூ.1,001 கோடியும் இந்​தி​யா​வில்​ மட்​டும்​ வசூல்​ ஈட்டி​உள்​ளன.

பழி தீர்க்குமா இலங்கை? முதலாவது டி20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது.

கண்டி பல்லேகல Pallekele மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடிவருகின்றது.

முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இந்நிலையிலேயே T20 தொடர் ஆரம்பமாகின்றது.

ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இலங்கை அணி இரசிகர்கள் கருதுகின்றனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (30.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு அவசியம்!

தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை அக்கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது.

கட்சி தலைவரான சிறிதுங்க ஜயசூரிய சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தவுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், வடக்கு மீன சமூகத்தின் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

ஹட்டன் பிரகடன உறுதிமொழிகள் எங்கே? ஜனாதிபதி கூறும் அதிகார சபையின் பின்புலம் என்ன?

” 2024 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் மலையக மக்கள் விடயத்தில் ஹட்டன் ட்டன் பிரகடனத்தை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி தனது பிரகடனத்தின் பிரதான உள்ளடக்கத்தை மறந்த நிலையில் அபிவிருத்தி சபையையும் இயங்கா நிலையில் மட்டுமல்ல அதனை நிரந்தரமாகவே அகற்றி விடுவதற்கும் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதற்கு சாவு மணி அடிப்பதற்கும் வழி தேடியதை நாம் அறிவோம்.”

– இவ்வாறு மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு?

“டித்வா புயலால் அழிந்த மற்றும் சேதமடைந்த வழிபாட்டு தலங்களை மீள கட்டமைக்கும் பணியின் அங்குராப்பண கூட்டம் கம்பளை தெரகல போதிருக்காராமை விகாரையில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க “நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலம் பொருந்திய மலைநாட்டு அதிகார சபையை உருவாக்குவேன்” என்றார்.

இவர் உருவாக்குவதாக கூறும் சபை மலையக மக்கள் என நாம் அடையாளப்படுத்தும் இந்நாட்டில் 200 வருட வரலாற்று வாழ்வை தமதாக்கி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முதுகெலும்பாகி உழைத்து வரும் மக்கள் சார்ந்ததா? அல்லது மக்கள் சக்திக்குள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பின்னணியில் அதிகார சபையா?

சிங்கள பௌத்தத்தை மையப்படுத்திய அதிகார சபையா? என மலையக சமூக ஆய்வு மையம் கேள்வி எழுப்பதோடு இது தொடர்பில் மலையக அரசியல் செயற்பாட்டாளர்களும், சிவில் சமூகத்தினரும் விழிப்பாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அனைவரும் மலையக மக்களை உழைப்பின் வர்க்கமாக மட்டும் பார்த்து அவர்களை ஒடுக்கி பின்தங்கிய வாழ்வு நிலைக்குள் தள்ளி, தேசிய வருமானத்தை அதிகரிப்பதிலும் அவர்களின் உழைப்பை கொள்ளையடிப்பதிலும் முழுக்கவனத்தையும் செலுத்தினர்.

சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைமைகள் மலையகத் தமிழ் சமூகம் எழுவதற்கு இடமளிக்கவில்லை. எனினும் சுய முயற்சியால் கல்வி, அரச தொழில், வர்த்தகம்… போன்ற துறைகளில் மலையகத்தில் முன்னேரிய வரலாறும் உண்டு.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் இம் மக்கள் சமூகத்தின் கௌரவம் மிகுந்த சமூக பாதுகாப்பு அபிவிருத்தி வளர்ச்சிக் கருதி உருவாக்கப்பட்டதே பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை. ஆனால் கடந்த காலங்களில் அது இயங்கும் நிலையில் வைக்கப்படவில்லை. அதற்கு நாட்டின் அரசியல், பொருளாதார, காரணிகளும் இடம் கொடுக்கவில்லை எனலாம்.

கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் மலையக மக்கள் விடயத்தில் ஹற்றன் பிரகடனத்தை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி தனது பிரகடனத்தின் பிரதான உள்ளடக்கத்தை மறந்த நிலையில் அபிவிருத்தி சபையையும் இயங்கா நிலையில் மட்டுமல்ல அதனை நிரந்தரமாகவே அகற்றி விடுவதற்கும்; பெருந்தோட்ட அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதற்கு சாவு மணி அடிப்பதற்கும் வழி தேடியதை நாம் அறிவோம்.

தற்போது தனி கட்சியின் ஆட்சியை பலப்படுத்தும் நோக்கில் காய் நகர்த்தும் தேசிய மக்கள் சக்தி, அரச கட்டமைப்புக்களை அசைக்கும் சக்தி மிகுந்த பிரஜாசக்தி குழுக்களை கிராமங்களில் அமைத்து வருவதோடு டித்வா புயலைத் தொடர்ந்து “நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலம் பொருத்திய மலைநாட்டு அதிகார சபையை உருவாக்குவேன்” என ஜனாதிபதி கூறியதை சந்தேகக் கண்கொண்டே பார்க்கத் தூண்டுகின்றது.

ஏனெனில் இந்த அதிகார சபை உண்மையில் பின் தள்ளப்பட்டுள்ள மலையக மக்களின் வாழ்வியல் அபிவிருத்தி சார்ந்த அதிகார சபையா? இல்லை சிங்கள பௌத்த கருத்தியலை மையப்படுத்தி அதனை விரிவாக்கம் செயற்பாட்டுக்கான அதிகார சபையா? என எம்மை சிந்திக்க வைக்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் மகாவலி அதிகார சபை தமிழர்களின் பூர்வீக காணிகளை பறிப்பதும், தொல்லியல் திணக்கமும், படையினரும், சிங்கள பௌத்த பேரினவாத பிக்குகள் நேரடியாகவே களத்தில் நின்று அதற்கு துணை புரிவதையும் நாம் அறிவோம். தனியார் காணிகளையும் அவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள் என்பதையும் ஆதிக்க மனநிலையின் உச்சமாக தையிட்டியில் தனியார் காணிகளைப் பறித்து விகாரை கட்டியுள்ளதையும் நாம் அறிவோம்.

மலையகத்தில் படையினரின் பங்களிப்பின்றி அல்லது தேவையெனில் அவர்களின் துணையோடு மகாவலி அதிகார சபை வடக்கு கிழக்கில் செயல்படுவதைப் போன்று மலையத்திலும் இயங்குவதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி பலம் பொருந்திய மலைநாட்டு அதிகார சபையை உருவாக்குவதாக நினைக்கத் தோன்றுகின்றது.

அவர்களின் பார்வையிலே மலையகம் என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கிய விரிந்த பூமி பிரதேசத்தையாகும். அதனை அவர்களின் அரசியல் நோக்கோடு பார்த்தே செயல்படுவார்கள் என்பது தெளிவு. அதிகார சபை தொடர்பான கருத்தினை விகாரையில் வைத்து கூறுவதன் உள்நோக்கம் எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

ஜனாதிபதியின் தற்போதைய கூற்றுப்படி 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலையக மக்களுக்கான அபிவிருத்தி சபை காணமலாக்கப்பட்டுவிடும் என்பது உறுதி. புதிதாக உருவாக்குவதாக கூறும் நினைத்துப் பார்க்க முடியாத பலம் பொருந்திய மலையக சபை தொடர்பான கருத்தாடல் நாடாளுமன்றத்தில் வரும்போது மலையக அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதோடு; மலையக அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கைகோர்த்து நின்றால் மட்டுமே தற்போது காணி தொடர்பான கருத்தாடலை பலமடை செய்யலாம். இல்லையெனில் அது எமது நிரந்தர கனவாகவே அமைந்து விடும் அபாயம் உள்ளது என்பதையும் மலையக சமூக ஆய்வு மையம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 04 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளின் கீழ் சுதந்திர தின விழா இடம்பெறும்.

இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்றது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சுதந்திர தின நிகழ்வுக்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவு சம்பந்தமாக கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சின் செயலாளர் பதிலளித்தார்.

“ சுதந்திர தின விழாவுக்காக 100 மில்லியன் ரூபா வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த செலவில் சுதந்திர தினத்துக்குரிய கம்பீரத்தன்மை குறையாமல் அதனை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த முறை சுதந்திர தின விழாவுக்கு 69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. எனவே, இம்முறையும் அந்த செலவுக்குள் நிகழ்வை நடத்த முடியும்.” – எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை, எதிர்கால இலங்கையை கட்டியெழுப்புவதற்காக சுதந்திர தின நிகழ்வை பயன்படுத்துவோம்.

இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்கிவருகின்றனர். அந்த ஆதரவு தொடரட்டும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

” பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கும் பொறுப்பை நாம் ஏற்கின்றோம்”

“இன்று முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்”

இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜனவரி 29ஆம் திகதி அத்துருகிரிய குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தில் நடைபெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

“ஒவ்வொரு பிள்ளைக்கும் வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை வழங்குவதற்கான பாரிய பொறுப்பை அரசாங்கம் என்ற வகையில் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் பாடசாலைக்குச் செல்வதைக் காணும் வகையில், புத்தகப் பையின் சுமையைக் குறைத்து, அழுத்தங்களற்ற கற்றல் சூழலை உருவாக்குவது புதிய கல்வி மறுசீரமைப்பின் ஒரு விசேட அம்சமாகும்.

மனதிற்கு இனிய பாடசாலைச் சூழலை உருவாக்குவதற்கான ‘கனவுப் பாடசாலை’ (Dream School) திட்டத்தை யதார்த்தமாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

இன்று முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்” – எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஓ.பி.எஸ்ஸை அதிமுகவில் இணைக்க முடியாது: ஈ.பி.எஸ். திட்டவட்டம்!

“அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

” 2026 தேர்தல் முடிவில் அதிமுகதான் ஆட்சியமைக்கும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் உங்களிடம் தெரிவிப்போம். கூட்டணி இறுதி வடிவம் பெற்றவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்குவோம்” எனவும் அவர் கூறினார்.

முன்னதாக இன்று தேனியில் பேசிய ஓபிஎஸ், “டிடிவி தினகரன் மற்றும் எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத்தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும்.

இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியேரால்தான் ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது. அதிமுகவில் இணைய நாங்கள் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா?” எனத் தெரிவித்திருந்தார்.

அதிமுகவில் இணைய ஓபிஎஸ் மீண்டும் இன்று விருப்பம் தெரிவித்த நிலையில், இபிஎஸ் அதனை உடனடியாக மறுத்துள்ளார். எனவே, இனி ஓபிஎஸ் அடுத்தகட்டமாக என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீன ஜனாதிபதி – பிரிட்டன் பிரதமர் சந்திப்பு!

சீன ஜனாதிபதி மற்றும் பிரிட்டன் பிரதமர் ஆகியோருக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை திரும்பியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால், நட்பு நாடுகள்கூட கடும் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றன.

ஏற்றுமதி பொருளாதாரதில் அமெரிக்காவை மற்றும் சார்ந்திருக்காது, ஏனைய பலம் பொருந்திய நாடுகளில் தமக்குரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது.

கனடா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் பொருளாதாரம்மீது தமது பார்வையை செலுத்திய நிலையில், பிரிட்டனும் புதிய அணுகுமுறையைக் கையாள முன்வந்துள்ளது.

இதற்கமைய பிரிட்டன் பிரதமர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு, முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மீண்டும் வலுப்படுத்துவதை இச்சந்திப்பு நோக்காக கொண்டிருந்தாலும், அமெரிக்காவுக்கான மறைமுக எச்சரிக்கை எனவும் கூறப்படுகின்றது.

பல ஆண்டுகளாக நிலவி வந்த ராஜதந்திர மோதல்களைக் கடந்து, வணிகம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த புதியதொரு முன்னேற்றமான பாதையை உருவாக்க இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் எதிர்கொண்டுள்ள பொருளாதார சவாலை சமாளிக்க உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியுடன் உறவு அவசியம் என்பதை உணர்ந்து, பிரதமர் ஸ்டார்மர் இந்த முக்கியமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உறவைச் சீரமைக்க லேபர் கட்சி முன்னுரிமை அளிக்கிறது.

இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து, மூலோபாயக் கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த சந்திப்பு ஒரு முக்கியத் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு, உலகளாவிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் பிரிட்டன் தனது சர்வதேச வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைப்பு செய்து வருவதை பிரதமரின் பிரிட்டன் பயணம் வெளிப்படுத்துகின்றது.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு முழு ஆதரவு!

அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் இன்று கருத்துத் தெரிவிக்கையில்,

“கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறும்.

இதில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தப் போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதோடு எமது பங்களிப்பையும் தொடர்ச்சியாக வழங்குவோம்.” – என்றார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” – ஈரான் ஜனாதிபதி

0
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

ரஷ்ய போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும்...