நீலகாமம் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரியும்!

‘நீலகாமம் பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்கு புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.’

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் வலியுறுத்தினார் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.

‘ நாம் நீலகாமம்’ பிரகடனத்தை மனோ கணேசன் இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றி இருந்தார். அவரின் உரையின் பிறகு கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

‘நீலகாமம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் சபையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அரசாங்கமே முன்னின்று, அரசாங்கத்தின் அனுமதியுடனேயே இது (தாக்குதல்) நடத்தப்பட்டது என்பதையே அவர் (மனோ கணேசன்) கூற முற்படுகின்றார்.
ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பிரச்சினையை எவ்வாறு அணுகுகின்றது என்பதும் மக்களுக்கு தெரியும்.

போலியான தகவல்களை மக்கள் மயப்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களது அரசாங்கம்தான் (ஐதேக) 83 களில் தோட்டங்களை எரித்தது.
கைதுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் குறைகூறவே இவர்கள் (எதிரணி) முயற்சிக்கின்றனர்.

மலையகத்தில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது.

மே தினத்தைக்கூட ஒழுங்காக செய்ய முடியாத அந்த நபர்களுக்கு (மலையக கட்சிகள்) அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை.’ என்றார் பிரதி அமைச்சர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,
‘பிரதி அமைச்சர் இங்கு பொய்யுரைக்கின்றார். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அரசாங்கத்தை தொடர்பு படுத்தவே இல்லை. அவர் தாமாகுவே தொப்பியை போட்டுக்கொள்கின்றார். விசர்தனமாக கதைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.’ என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles