நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் உரியவகையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அமைச்சர், சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடும்போதே இவ்வாறு கூறினார்.
“எவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கமாட்டேன். விசாரணை நடத்தப்படும். நீதி நிலைநாட்டப்படும். அதிகாரிகளுக்கு அநீதி இழைக்க இடமளியேன்.
உயிரிழந்தவர்களுக்கு உயிரை மட்டும்தான் மீள வழங்கமுடியாது. நிச்சயம் நீதியை வழங்குவேன்.” எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சிறைச்சாலை நுழைவாயிலில் அருகில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அவரால்தான் பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டது என சிறைச்சாலை அதிகாரிகள் , அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.










