பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரானிய ராணுவம் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறிப்பாக அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
எனினும், திட்டமிட்ட அடிப்படையில் ட்ரோன்கள் இலக்குகளை தாக்கினவா அல்லது இவை வழிமறிக்கப்பட்டு மேற்படி நாடுகளால் அழிக்கப்பட்டனவா என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஈரான் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் திட்டங்களைத் தடுத்து நிறுத்தி, தங்கள் நாட்டின் புரட்சிகர கொள்கைகளைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல், வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்த ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கை, அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட ஒரு நேரடி எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.










