நாட்டில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 34,268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 13,322 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 பேரும் அடங்குகின்றனர்.
மேலும், மத்திய மாகாணத்தில் 5,257 பேரும், வடக்கு மாகாணத்தில் 1,010 பேரும், கிழக்கு மாகாணத்தில் 3,081 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய பகுதிகளாக 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.










