“3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது எப்படி என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” – என்று ஆர்சிபி அணி தலைவர் ரஜத் பட்டிதார் தெரிவித்தார்.
இறுதிப் போட்டிக்கு பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ கடந்த ஆண்டு எங்களுக்கு மிகப்பெரிய அழுத்தம் இருந்தது. ஆனால் இம்முறை தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம் காரணமாக, நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தது.
இந்த ஆண்டு நாங்கள் சாதாரணமாக விளையாடவில்லை, ஒட்டுமொத்த தொடரையும் எங்களது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தோம்.
இதே போல் தொடர்ந்து விளையாடினால், நிச்சயமாக 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம்.
அடுத்ததாக நாங்கள் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது எப்படி என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” எனவும் ஆர்சிபி அணி தலைவர் குறிப்பிட்டார்.










