இலங்கையின் மிக வயதான பெண் 114 ஆவது வயதில் காலமானார்

அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவ (Sangili Kanadarawa) பகுதியைச் சேர்ந்தவரும், இலங்கையின் மிக வயதான பெண்மணிகளில் ஒருவராக பரவலாக அறியப்பட்டவருமான புஞ்சாகே களுமெனிகே (Punchage Kalumenike), தனது 114 ஆவது வயதில் இன்று (13) காலமானார்.

1912 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த களுமெனிகேவுக்கு இந்த ஆண்டு 114 ஆவது பிறந்த ஆண்டாகும்.

ஆனால் அண்மையில் அவர் தவறி விழுந்ததால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்பின்னதாக இரண்டு மாதங்கள் உயிர் பிழைத்திருந்த அவர் இறுதியில் அவர் காலமானார்.

களுமெனிகேவுக்கு 12 பிள்ளைகளும், 325 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட ஒரு பெரிய பரம்பரையினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles