பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரியின் கம்பஹா பிரதேசத்திலுள்ள வீட்டை உடைத்து உட்புகுந்த நபரொருவர், ஆறு லட்ச ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ,ஒரு பால் மா பெக்கட்டையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார் என கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் பரிசோதகரும் அவரது மனைவியும் கடமை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டிலுள்ள அலமாரி உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மற்றும் சமையலறையிலிருந்த பால் மா பெக்கட்டையும் யாரோ திருடிச் சென்றுள்ளதை அவதானித்து, கம்பஹா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
கம்பஹா தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.










