“இந்நாட்டுக்காக தமது உயிரையே உரமாக்கியவர்களே மலையக மக்கள்: அவர்களை இழிவாக பேசுவதை நிறுத்துங்கள்”

” உண்மையில் மலையக மக்கள் தியாகிகள். பரம்பரை பரம்ரையாக கஸ்டத்தை அனுபவித்து, தோட்டத்தில் பிறந்து, தேயிலைச் செடிகளுக்கு தம்மை உரமாக்கிய அந்த மக்களைப் பார்த்து, இழிவாகப் பேசும் நபர்கள் இனிமேல் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மையில் மனசாட்சி, மனிதநேயம் இருந்தால் அவ்வாறு பேசமாட்டீர்கள்.” என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

நேற்று (29.09.2026) ஊவாபரணம- அலகொல்ல தோட்டத்தில் 13 வருடங்களாக மண்சரிவு அதி உயர் வலயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்,

” இன்று எமது மக்களைப் பார்த்து சிலர் இழிவாகப் பேசுகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். 203 வருடங்களுக்கு முன்பு காடாக இருந்த பிரதேசங்களை அழித்து. இந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட்டு, தமது உறவுகளை இழந்து, மண்ணை வளப்படுத்திய மக்களால் தான் நாடு வளம்பெற்றது.

அவர்களின் அந்நிய செலாவணியால் தான் இந்த நாட்டில் கல்வி கூடங்கள் உருவாக்கப்பட்டது. அதிலிருந்து வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கல்விமான்களை உருவாக்கியவர்களே மலையக மக்கள் என்றார்.

மேலும் மலையக மக்களைப் பொறுத்தவரை வீடு என்பது எமது நெடுநாள் கனவு. இது சாதாரண வீடு அல்ல. எம்மைப் பொறுத்தவரை மிகப் பெரிய கனவு. எனவே வீடு என்பது சாதாரண செங்கல், சீமந்தால் கட்டப்படுவதல்ல எமது கனவு, கௌரவம்,எதிர்பார்ப்பு, சுயமரியாதை எல்லாவற்றுக்கும் மேலாக எமது காணியுரிமை. இவையெல்லாம் பெற்றுக்கொடுப்பது தான் இந்த வீட்டுத்திட்டத்தின் நோக்கம் என்றார்.

இந்த 10,000 வீட்டுத்திட்டமும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் எமது மக்களுக்காக பாரதமக்களின் வரிப் பணத்தின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது.எனவே எப்போதும் எமக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles