தெல்தெனிய சம்பவம்: சந்தேக நபர்கள் நீதிமன்றில் இன்று ஆஜர்

கண்டி, தெல்தெனிய பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரும், அவரது மனைவியும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று(25) முற்படுத்தப்படவுள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, தடுப்பு காவல் உத்தரவைப்பெறுவதற்கு பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.

சந்தேக நபரும், அனைவரது மனைவியும் கொழும்பில் இருந்து யாழப்பாணத்துக்கு தப்பிச்சென்றவேளை நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இந்தியாவுக்கு தப்பிச்செல்லும் நோக்கிலேயே யாழ்ப்பாணம் சென்றிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles