ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் கைப்பற்றி, அந்த நாட்டின் எரிசக்தி சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் கார்க் தீவையும் (Kharg Island) ட்ரம்ப் குறிவைத்துள்ளார்.
வெனிசுலாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களைப் போலவே, ஈரானிலும் அமெரிக்க அழுத்தம் காரணமாகப் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவத் தாக்குதல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்று ட்ரம்ப் கூறினாலும், தரைப்படை வீரர்களை நேரடியாகப் போரில் ஈடுபடுத்த அவர் இன்னும் தயக்கம் காட்டி வருகிறார்.
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், இந்தத் திடீர் அச்சுறுத்தல் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










