சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
” பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பையும், கலை – கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அப்படியானால் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்கவேண்டும்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.