மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சீக் தோட்டப் பிரிவில் இன்று (13) மதியம் ஏற்பட்ட குளவிக்கொட்டுத் தாக்குதலில் 20 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டப் பகுதியில் பெண் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த குளவிக்கூடு திடீரெனக் கலைந்து அவர்களைக் கொட்டியுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்காகிப் பாதிக்கப்பட்ட 20 பெண்கள் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பெண்கள் வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ள நிலையில், ஏனைய 8 பெண்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர்
