மஸ்கெலியா, சாமிமலை – கவரவலை தோட்டம் 200 ஏக்கர் பிரிவில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் 15 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆறு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். நான்கு பெண்களும், இரு ஆண்களுமே சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
ஏனைய 9 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வெளியேறியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










