கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு

ஃபிரைட் ரைஸ், கொத்து மற்றும் உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 20% குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தவிர ப்ளேன் டீ விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ப்ளேன் டீ ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் தேயிலை ஒன்றின் விலை 90 ரூபாவாகவும் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles