அக்கரபத்தனை பிரதேசசபை பட்ஜட் நிறைவேற்றம்: 6 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை

 

அக்கரபத்தனை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம், இன்று (29) நடைபெற்ற விசேட சபைக் கூட்டத்தில் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில், சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் சபையின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வரவு–செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குறித்த விசேட கூட்டத்தில் சபையின் 6 உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது, வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, 3 மேலதிக வாக்குகளால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரவு–செலவுத் திட்டம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி அறிவித்தார்.

வாக்கெடுப்பு விபரம்:

ஆதரவு: 6 வாக்குகள்
எதிர்ப்பு: 3 வாக்குகள்
சமூகமளிக்காத உறுப்பினர்கள்: 6 பேர்
முடிவு: 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

கடந்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் முதன்முறையாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது தோற்கடிக்கப்பட்டிருந்ததுடன், இரண்டாவது தடவையாகச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் எவ்வித இழுபறியுமின்றி முதல் தடவையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles