அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் போட்டி – வெளியானது அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று 2030 வரை அவர் ஜனாதிபதியாக நீடிப்பார் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளர் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அல்லது கூட்டணியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த பாலித ரங்கே பண்டார, ஜனாதிபதி தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் என்று குறிப்பிட்டார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பதவி விலகிய கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய ஜனாதிபதி பதவிக் காலத்தை ரணில் விக்கிரமசிங்க தற்போது வகித்து வரும் நிலையிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles