அடுத்த வாரம் சீமெந்து விலையும் அதிகரிப்பு!

சீமெந்து விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும், அடுத்த வாரமளவில் விலை அதிகரிப்பு இடம்பெறும் எனவும் சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உட்பட மேலும் சில காரணங்களாலேயே விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மூன்று கால பகுதிக்குள் மாத்திரம் மூன்று தடவைகள் சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது 50 கிலோ சீமெந்து 2 ஆயிரத்து 350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையிலேயே அடுத்தவாரம் முதல் விலை அதிகரிப்பு இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles