அத்தியாவசிய பொருளாக அறிவிக்கப்படுமா பிஸ்கட்?

சீமெந்து, இரும்பு, கம்பிகள், கோழியிறைச்சி , முட்டை மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வர்த்தக அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று(10) நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஜூலை முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த கணக்கு முறையின் மூலம் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் 10 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிஸ்கட் விலை அதிகரிப்பு குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கீழ் பிஸ்கட்களை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் ஒரு அங்கமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles