அநுராதபுரம் மதவாச்சி பகுதியில் கோர விபத்து: ஐவர் பலி

அநுராதபுரம், மதவாச்சி – ரம்பேவ பகுதியில் A -9 வீதியில் இன்று முற்பகல் இடமபெற்ற கோர வாகன விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

மூன்று பஸ்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இரு இபோச பஸ்களும், தனியார் பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் மெதவாச்சி, அநுராதபுரம் உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles