அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய அழைப்பாளர்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் மாணவர் ஒன்றியத்தின் புதிய அழைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று (20) இடம்பெற்ற அமர்வின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles