அமெரிக்காவில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

அமெரிக்கா, நியூ ஆர்லியன்ஸில் மக்கள் மீது வாகனத்தை ஏற்றி கொன்று பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றியவர் 42 வயதான ஷம்சுத் தின் ஜப்பார் என்பது தெரியவந்ததுள்ளது.

ஷம்சுத் தின் ஜப்பார் ஓட்டி வந்த வாகனம் மக்கள்மீது மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 35 பேர்வரை காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய ஷம்சுத் தின் ஜப்பார் அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஏஆர் பாணி துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது பயங்கரவாத சம்பவம் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். தாக்குதல் நடத்தியவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சாரதி ஷம்சுத் தின் ஜப்பார் டெக்சாஸில் பிறந்தவர் என்றும், 10 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles