அமைச்சரவையில் 5 ஆவது ராஜபக்ச – பஸில் இன்று பதவியேற்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அத்துடன், நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது. 10.3 மணியளவில் பஸில் ராஜபக்ச, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வார்.

தற்போதைய அமைச்சரவையின் பிரதானியாக ஜனாதிபதி செயற்படுகின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் முக்கிய சில அமைப்பு பதவிகளை வகிக்கின்றார். சமல் ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர். பஸில் அமைச்சு பதவியை ஏற்றபின்னர் அமைச்சரவையில் உள்ள ராஜபக்சக்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கவுள்ளது.

Related Articles

Latest Articles