அமைச்சரானார் சரோஜா போல்ராஜ்!

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக சரோஜா போல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இதன்போதே அமைச்சராக சரோஜா போல்ராஜ், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மலையக அரசியல் வரலாற்றில் தமிழ் பெண்ணொருவர் அமைச்சராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

……

பிரதம அமைச்சராக கலாநிதி ஹரினி அமரசூரிய, ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
May be an image of 4 people, newsroom and text
…….
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.
May be an image of 5 people, dais and text
 ……..
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
May be an image of 4 people and dais
…….
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
……….

1. இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றதுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றார்.

2. விஜித ஹேரத் – வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

3. பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

4. சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

5. சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

6. கே.டி.லால்காந்த – கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

7. அனுர கருணாதிலக்க – நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

8. இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் , நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

9. பேராசிரியர் உபாலி பன்னலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

10. சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

11. ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

12. பிமல் ரத்னாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

13. பேராசிரியர் ஹிணிதும சுனில் செனவி – புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

14. வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

15. சமந்த வித்தியாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

16. சுனில் குமார கமகே – இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

17. வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

18. பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

19. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னான்டோ – தொழில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

20. பொறியியலாளர் குமார ஜயகொடி – எரிசக்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

21. வைத்தியர் தம்மிக்க பட்டபெதி – சுற்றாடல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

Related Articles

Latest Articles