அமைச்சர்கள் சிறப்பான முறையில் தமது பணிகளை முன்னெடுத்துள்ளனரா என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை பெற்றுள்ளார் என தெரியவருகின்றது.
அமைச்சுகளால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள், வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் உரிய வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளனவா, சுற்று நிருபங்கள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா என்பன உட்பட பல விடயங்கள் மேற்படி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.
இதற்கமைய உரிய வகையில் செயற்படாத அமைச்சர்களின் விடயதானங்கள் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது கைமாற்றப்படும் என தெரியவருகின்றது.
