அம்பாறை, தமன பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். ஐவர் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.










