அரசின் வேலைத்திட்டங்களை அவதானிக்கின்றோம்

பாதுகாப்பு தொடர்பில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.

எனக்கான பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. பாதுகாப்புக்கென இருப்பவர்கள் அப்பணியை சிறப்பாக செய்கின்றனர்.

நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்தான். உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை.”- என்றார்.

Related Articles

Latest Articles