‘மவ்பிம ஜனதாக் கட்சி’யின் தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
‘மவ்பிம ஜனதாக் கட்சி’யானது நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் தம்பியான ஹேமகுமார நாணயக்காரவுக்கு உரித்தானதாகும். எனினும், அக்கட்சியின் தலைமைப்பதவியை அவர் தற்போது தொழிலதிபரும், பிரபல ஊடக நிறுவனமொன்றின் உரிமையாளருமான திலித் ஜயவீரவுக்கு வழங்கியுள்ளார்.
அக்கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராக ஹோமகுமார நாணயக்கார செயற்படுகின்றார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே திலித் ஜயவீர இந்த அரசியல் நகர்வை மேற்கொள்கின்றார் எனக் கூறப்பட்டாலும், இது அடுத்த தேர்தலை இலக்காக கொண்டது அல்ல, தூரநோக்கு சிந்தனையை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று குறிப்பிட்டார்.










