ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
புதிய அரசமைப்பு, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளன.
அத்துடன், புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெறவிருந்தது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் அது நாளைவரை பிற்போடப்பட்டது.
