எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோ கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 80 ரூபாவாகவும், அதன்பின்னர் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபாவையும் நிர்ணயிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசி எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விரைவில் அதிகரிப்பை மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
