ஆலமரம் முறிந்து விழுந்து புசல்லாவையில் ராமர் கோவில் முற்றாக சேதம்!

புசல்லாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பொட தோட்டம் கீழ்பிரிவில் அமைந்திருக்கும் ஶ்ரீராமர் ஆலயம்மீது நேற்று இரவு 11.30 மணியளவில் பாரிய ஆலமரம் முறிந்து விழுந்ததில் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது.

ஆலயத்துக்குள் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கும், பிரதேச செயலகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. புசல்லாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

புசல்லாவை பவன்

Related Articles

Latest Articles