இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிஎல்எப் அலுவலகத்துக்கு இன்று வருகை தந்திருந்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் அவரது பாரியார் ஆகியோர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்தனர்.
CLF யில் உள்ள மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுடைய உருவப் படத்திற்கு மாலையும் அணிவித்தனர்.
மறைந்த தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் இன்றுவரை இ.தொ.காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு தொடர்பாகவும், இ.தொ.கா செய்து வரும் சேவைகள் குறித்தும் இதன் போது ஜப்பான் தூதுவர் பாராட்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கணகராஜ், மூத்த அரசியல்வாதி மதியுகராஜா, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் மரயா சக்தி மற்றும் கட்சியின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.










