இந்தியாவில் 366,161 பேருக்கு நேற்று கொரோனா – 3,754 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்ட இந்தியா, 2-வது அலையில் இருந்து மீள்வதற்காக தனது ஆவேசப்போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனாவும் ‘விட்டேனா பார்’ என்று சொல்கிற விதத்தில் ஒரே வாரத்தில் 5-வது முறையாக நேற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தனது கோரப்பிடியின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் 4 லடசத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,26,62,575 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,46,116 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 353,818 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,71,222 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,45,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Latest Articles