இரத்தினபுரி, கேகாலை மாவட்ட பட்டதாரிகளுக்கு ஜீவன் வழங்கியுள்ள உறுதிமொழி

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள் வாங்காது அவர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் உள் வாங்கப்டுகின்றனர். என இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானூடான சந்திப்பு தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் (16) இடம்பெற்றது.
இச் சந்திப்பில் சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் தலைமையில் பட்டதாரி ஆசிரியர்கள் பலரும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பட்டதாரிகள், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் கடமையாற்ற தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இம் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களை புறக்கனித்து விட்டு இங்குள்ள தமிழ் டசாலைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருவது கவலைக்குரிய விடயமாகும் .

எனவே இவ் விடயத்தினை அமைச்சர் ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கோரிக்கையை முன் வைத்தனர்.

இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் மலையக கல்வி வளர்ச்சியில் ஆரம்ப காலம் முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்காத செயற்பாடுகளை செய்து வருகின்றது.

அதனடிப்படையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆளணி பற்றாக்குறையை தீர்க்க இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உரிய பாடசாலைகளுக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேநேரத்தில் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கும் கொண்டு வந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் விரைவில் உரிய தீர்வை பெற்று தருவதாக சந்திப்பில் கலந்து கொண்ட பட்டதாரிகளுக்கு மேலும் நம்பிக்கை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஷ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles