இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படும் உறுதியளித்தார் கம்மன்பில

இலங்கை மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

இன்று (02) காலை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏனைய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபைக்கு தேவையான எரிபொருள் இன்று (02) முதல் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நுரைச்சோலை, சப்புகஸ்கந்த, களனிதிஸ்ஸ மற்றும் கொழும்பில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதன்காரணமாக நேற்று (01) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles