“இலவச சுகாதாரத்தை சீர்குலைக்க சதி – அதனை தோற்கடிக்க வேண்டும்” – கெஹலிய

நாட்டில் இலவச சுகாதார துறையை சீர்குலைப்பதற்கான சதிகள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றை முறியடிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது – என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, வாக்கெடுப்பின்போது தோல்வி அடையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

” நாட்டு மக்களுக்கு இலவச சுகாதாரதுறைமீது உள்ள நம்பிக்கையை இல்லாது செய்வதற்கான சூழ்ச்சியே தற்போது இடம்பெற்றுவருகின்றது. இதற்கு இடமளிக்க முடியாது.

சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் நேரம் கோரியுள்ளனர். ” – எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

 

 

 

Related Articles

Latest Articles