உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும்  விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதி  முதல் எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles