உயிரிழந்தால் அரக்கனாக வந்தேனும் புனித பூமியை காப்போம்: கஸ்ஸப தேரர் சபதம்

எங்களுக்கு உயிரைவிட புத்த சாசனமே முக்கியம். புத்த பூமியை இந்தியாவுக்குத் தாரைவார்க்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.”

– இவ்வாறு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் சூளுரைத்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருக்கு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலேயே, தமது இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை நீர் மற்றும் உணவு உள்ளிட்ட எதனையும் உட்கொள்ளாமல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கஸ்ஸப தேரர் நேற்று முதல் அறிவித்துள்ளார். அவருடன் மேலும் இரண்டு தேரர்களும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

“புத்த சாசனம் மற்றும் அநுராதபுரம் புனித பூமி ஆகிய விடயங்களில் அரசாங்கம் தலையிட முற்படக்கூடாது. எமக்கு உயிரைவிட புத்த சாசனமே முக்கியம். எங்களின் உயிர்தான் உங்களுக்கு முக்கியம் என்றால் அதனை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், புத்த சாசனத்தை விட்டுக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.நாம் உயிரிழந்தாலும் அரக்கனாகவோ அல்லது தெய்வமாகவோ மீண்டும் வந்து இந்தப் புனித பூமியைப் பாதுகாப்போம்.” ” எனவும் கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles